லாசா நகரம், ri ka ze நகரம், jiang zi நகரம் ஆகியவற்றை, வரலாற்று பண்பாட்டுப் புகழ் பெற்ற நகரங்களாக, சீன அரசவையின் தொடர்புடைய துறை அறிவித்தது. Chang zhu சிறு நகர், வரலாற்று பண்பாட்டுப் புகழ் பெற்ற சிறு நகர்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தலைசிறந்த பண்பாட்டு மரபுச் செல்வங்கள், திபெத்தின் வரலாற்று மாற்றங்களை உண்மையாக பதிவு செய்து, திபெத்துக்கும் தாய்நாட்டின் பிற இடங்களுக்குமிடையிலான உறவை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளன.
திபெத்தில் மூன்று பெரிய முக்கிய தொல் பொருடள் பாதுகாப்பு சீரமைப்பு திட்டங்களில் Sakya துறவிகள்மடத்தைச் சீனா சேர்த்துள்ளது. போத்தலா மாளிகை, Norbolingka ஆகியவற்றுடன் இணைந்து, Sakya துறவிகள் மடத்தின் மீதான சீரமைப்பும் பாதுகாப்பும், ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று Sakya துறவிகள்மடத்தின் ஜனநாயக நிர்வாகக் கமிட்டியின் துணை இயக்குநர் luo zhu jia cuo கூறினார். அவர் மேலும் கூறியதாவது
Sakya துறவிகள் மடம், திபெத் மரபுவழி புத்தமத நம்பிக்கை உடைய Sa'gya பிரிவின் முக்கிய கோயிலாக மட்டுமின்றி திபெத்-han இன ஒற்றுமையின் வரலாற்றுச் சான்றாகவுமுள்ளது. திபெத் மற்றும் உலகின் மதிப்புள்ள பண்பாட்டுச் செல்வமாக, Sakya துறவிகள் மடத்தின் சீரமைப்பு, ஆழந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 2009ம் ஆண்டின் வசந்தகாலத்தில், இத்திட்டப்பணி, நிறைவேறும் என்று அவர் மதிப்பிடப்பட்டார்.