• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனத் தேசிய இனப் பொருளாதாரமும் சமூகமும்]
தேசிய இன பொருளாதாரம்  

சீனப் பொருளாதாரம் வளர்வதோடு, தேசிய இன பிரதேசங்களின் பொருளாதாரமும் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

கால்நடை வளர்ப்பு, சீன சிறுபான்மை தேசிய இன பிரதேசங்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும். கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளுக்கு பின், மேய்ச்சல் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு பொறுப்பு ஏற்கும் ஒப்பந்த அமைப்பு முறையை சீனா செயல்படுத்தியுள்ளது. கால்நடைகளையும் மேய்ச்சல் பண்ணையின் உபயோக உரிமையையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வினியோகித்து, புல்வெளி வளர்ப்பு மற்றும் நிர்வாக முறைமையை சீனா வலுப்படுத்தியுள்ளது. தற்போது, சீனாவின் முக்கிய மேய்ச்சல் பண்ணைகள் அமைந்துள்ள சிங் ஹாய், கான் சு, சி சுவான், சின் சியாங் உள்ளிட்ட மாநிலங்களிலும், நிங் சியா, உள் மங்கோலியா உள்ளிட்ட தன்னாட்சி பிரதேசங்களிலும் மேய்ச்சல் தொழிலில் விரைவான வளர்ச்சி காணப்பட்டுள்ளது. தற்போது, முழு நாட்டின் மேய்ச்சல் நிலத்திலும், வேளாண் தொழில் மேய்ச்சல் துறை இணைந்த பிரதேசத்திலும் கால்நடைகளின் எண்ணிக்கை பத்து கோடியைத் தாண்டியுள்ளது என்று புள்ளி விபரம் கூறுகிறது. அவற்றின் ஆயுளும் விற்பனை விலையும் பெருமளவில் அதிகரித்துள்ளன. தவிர, குடும்பத் தொழிலை அடிப்படையாக கொண்ட மேய்ச்சல் பண்ணைகள் சில மேய்ச்சல் பிரதேசங்களில் தோன்றுகின்றன. தொழில் முறை மயமாக்க உற்பத்தி மூலம், குடும்ப மேய்ச்சல் பண்ணையின் உற்பத்தித் திறனும் பயனும் பெருமளவில் உயர்ந்துள்ளன.

தேசிய இன பிரதேசங்களிலுள்ள நகரங்களில் பொருளாதார வளமும், வேளாண்மை சாரா சமூக பொருளாதார நடவடிக்கைகளும் செறிந்திருக்கின்றன. இந்த நகரங்கள் தேசிய இன பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியத் தலங்களாகும். 80ஆம் ஆண்டுகளுக்கு பின், சீனாவின் இதர பிரதேசங்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததோடு, சிறுபான்மை தேசிய இன பிரதேசங்களின் பொருளாதாரமும் விரைவாக வளர்ச்சியுற்று வருகிறது. தற்போது, தேசிய இன தன்னாட்சி பிரதேசங்களில் தொழில் துறை தொழில் நிறுவங்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பெரிய ரக நவீன மயமாக்க தொழில் நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், வணிக தொழில், சேவை தொழில் உள்ளிட்ட பல்வகை பொருளாதார வடிவம் கூட்டாக நிலவும் கட்டுக்கோப்பு உருவாகியுள்ளது. உள் மங்கோலியா, சிங் ஹாய், நிங் சியா, சின் சியாங் முதலியவற்றின் நகரமயமாக்க நிலை, சீன நகரமயமாக்கத்தின் சராசரி நிலையை விட அதிகம். தேசிய இன பிரதேசங்களின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.

தேசிய இன பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சியில், அரசு சாரா பொருளாதாரம் மக்களின் கவனம் ஈர்த்துள்ளது. எடுத்துக்காட்டாக, சின் ஹாய் மாநிலத்தின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில், அரசு சாரா பொருளாதாரம் 40 விழுக்காட்டுக்கு மேல் இருக்கிறது.

வெளிநாட்டு திறப்பை விரிவாக்கும் போக்கில், சர்வதேச பொருளாதார மற்றும் தொழில் நுட்ப பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் தேசிய இன பிரதேசங்களிலுள்ள சில நகரங்கள் படிப்படியாக பெற்றுள்ளன. வெளிநாட்டு திறப்பு பணி தீவிரமாக வளர்ச்சியுற்று வருகிறது. தற்போது, உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் எர்தோஸ் காஷ்மீர் கம்பளி நூல் தயாரிப்பு(cashmere உற்பத்தி பொருள்) பங்கு கூட்டு நிறுவனம், சின் சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் தியான் யெ பங்கு கூட்டு நிறுவனம் முதலியவை, உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ் பெற்ற பெரிய ரக நிறுவனங்களாகும்.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040