சீன தேசிய இன அறிவியல் தொழில் நுட்பம்
சிறுபான்மை தேசிய இன பிரதேசங்களின் அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்காக, சீன அரசு சில சிறப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, சிறுபான்மை தேசிய இன அறிவியல் தொழில் நுட்ப தொழிலாளர்களை வளர்த்து பயிற்றுவிப்பது, பொது உயர் கல்வி நிலையங்களில் சிறுபான்மை தேசிய இன மாணவர்களைச் சேர்த்து, தேசிய இன வகுப்புகளை நிறுவுவது, தேசிய இன கல்லூரிகளில் தேவையான தொழில் துறைகளை நடத்தி, ஏற்கனவேயுள்ள சிறப்பு தொழில் திறமைசாலிகளை வளர்ப்பது, தொழில் நுட்ப திறமைசாலிகளுக்குப் பயிற்சி அளிப்பது, சிறுபான்மை தேசிய இன பிரதேசங்கள் திறமைசாலிகளை ஈர்க்கவும் தொழில் நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்தவும் பரம்பரை தொழில் துறையையும் உற்பத்திப் பொருட்களையும் சீர்திருத்தவும் உதவி வழங்குவது, கிராமங்களிலுள்ள மேய்ச்சல் பிரதேசங்களில் அறிவியல் தொழில் நுட்ப பரவல் முறைமையை நிறுவி மேம்படுத்துவது, சலுகை கொள்கையை வகுப்பதன் மூலம் அறிவியல் தொழில் நுட்ப திறமைசாலிகள் தேசிய இன பிரதேசங்களில் வேலை செய்ய ஊக்குவிப்பது, இப்பிரதேசங்களுக்கு வளர்ந்த பிரதேசங்கள் வழங்கிய உதவியை வலுப்படுத்துவது முதலியவை, இந்த கொள்கைகளில் இடம்பெறுகின்றன. தற்போது, பல்வேறு தேசிய இன பிரதேசங்களில், தேசிய பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை மற்றும் தேசிய இன தனிச்சிறப்புக்கு ஏற்ற அறிவியல் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. பல்வகைபட்ட கல்வி துறைகள் இசைவான அறிவியல் ஆய்வு அமைப்பு முறையும் சிறப்பு தொழில் நுட்ப குழுவும் உருவாகியுள்ளன.
புள்ளி விபரங்களின் படி, சீன தேசிய இன தன்னாட்சி பிரதேசங்களைச் சேர்ந்த அறிவியலாளர் மற்றும் பொறியலாளரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த அறிவியல் தொழில் நுட்ப தொழிலாளர்கள், தேசிய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் முக்கிய ஆற்றலாக மாறி வருகின்றனர். அவர்களில், அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞர், பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞர், கல்வி துறையில் முன்னோடி, பயன்பாட்டு தொழில் நுட்ப பரவலுக்கு பங்காற்றிய திறமைசாலி ஆகியோர் இடம்பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, சீன அறிவியல் கழகத்தின் ஹுய் இன மூத்த அறிஞர் வாங் சி வென், முதியோரின் இதய நோய் மற்றும் முதியோருக்கான முதல் உதவி துறையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறார். சீனாவில் புதிதாக தோன்றிய கல்வி துறையான முதியோர் மருத்துவத்துக்கு அவர் பெரும் பங்காற்றியுள்ளார். சீன பொறியியல் கழகத்தின் சுவாங் இன மூத்த அறிஞர் வெய் யு, ஜெர்மன் யசென் தொழில் துறை பல்கலைக்கழகத்தின் டார்டர் பட்டம் பெற்றார். மின்னணு உயிரினவியல் மற்றும் உயிரின எண்ணல் துறையின் முன்னோடி ஆக அவராவார். கொரிய இனத்தைச் சேர்ந்த வேளாண் அறிவியல் ஆய்வாளர் செங் ஹுய் யு, soya bean விதை பெருக்கம் மற்றும் வகை மூலவள ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார். ஜி லின் 20வது இலக்கம் என்ற சிறு grain soybean வளர்த்தார்.
1 2 3 4