சீன தேசிய இனப் பண்பாடு
சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டை வளர்ப்பதற்காக, பல்வேறு தேசிய இன தன்னாட்சி பிரதேசங்களும் தன்னாட்சி மாவட்டங்களும் தனது நிலைமைக்கு இணங்க, எழுத்தாளர் சங்கம், நாடக சங்கம், இசை சங்கம், நடன சங்கம், ஓவிய சங்கம், திரைப்பட சங்கம், நிழற்பட சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை எற்படுத்தியுள்ளன. சில சிறுபான்மை தேசிய இன தன்னாட்சி பிரதேசங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும் தேசிய இன கழகங்களிலும், சிறுபான்மை தேசிய இன இலக்கிய துறை நிறுவப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் கலை பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, இசை கல்லூரி, நாடக கல்லூரி, திரைப்பட கல்லூரி இவற்றில் அடங்கும். கலை-இலக்கிய துறையில் பல சிறுபான்மை தேசிய இனத் திறமைசாலிகள் வளர்க்கப்பட்டுள்ளனர். தேசிய இன மருத்துவ மருந்துத் துறையில், இன்று வரை, திபெத், உள் மங்கோலியா மற்றும் சின்சியாங்கில், திபெத் மருத்துவ பள்ளி, மங்கோலிய மருத்துவ பள்ளி மற்றும் உய்கூர் மருத்துவ பள்ளி தனித்தனியாக நிறுவப்பட்டுள்ளன.
சீனாவில் சிறுபான்மை தேசிய இன எழுத்தாளர் குழுவும் கலைஞர் குழுவும் உருவாகியுள்ளன. மஞ்சு இன எழுதாளர் லாவ் ஷெ, தைய் இன கவிஞர் காங் லாங் யிங், ஹெ சே இன எழுதாளர் உ பைய் சின் முதலியோர் குறிப்படத்தக்கவர்களாவர். தொழில் முறை மற்றும் ஓய்வு நேர சிறுபான்மை தேசிய இன கலை குழுகள் அடுத்தடுத்து உருவாகியுள்ளன. சிறுபான்மை தேசிய இனங்களின் கிராமங்களிலும் மேய்ச்சல் பிரதேசங்களிலும் பட்டணங்களிலும் அவை சுறுசுறுப்பாக செயல்படுகின்றன.
சிறுபான்மை தேசிய இனங்களின் நாட்டுப்புற இலக்கிய மற்றும் கலை பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சீன நாட்டுப்புற பாடல் தொகுதி, சீன நாடக இசை தொகுதி, சீன நாட்டுப்புற இசை கருவி தொகுதி, சீன நாட்டுப்புற அரங்க இசை தொகுதி, சீன தேசிய இனத்தின் நாட்டுப்புற நடனம் தொகுதி, சீன நாடக பதிவு(records), சீன நாட்டுப்புற கதை தொகுதி, சீன பாடல்கள்(ballad) தொகுதி, சீன பழமொழிகள் தொகுதி, சீன நாட்டுப்புற அரங்கக் கலை தொகுதி ஆகிய 10 பெரிய இலக்கிய கலை தொகுதிகளில் பெருவாரியான சிறுபான்மை தேசிய இனத் தகவல்கள் அடங்கும்.
சிறுபான்மை தேசிய இனங்களின் இலக்கிய கலை இதழ்கள் மேம்பட்டுள்ளன. தற்போது, சீனாவில் 100க்கும் அதிகமான வகைகளில் பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்களின் இலக்கிய கலை பத்திரிகைகள் காணப்படுகின்றன. கவிதை, இசை, நுண்கலை, திரைப்படம் முதலியவை பற்றிய சிறப்பு இதழ்கள் சில பிரதேசங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. 20க்கும் அதிகமான இதழ்கள் சிறுபான்மை தேசிய இன மொழியில் வெளியிடப்படுகின்றன. சீனாவில் தேசிய இன தன்னாட்சி பிரதேசங்களில் வெளியிடப்பட்ட நூல், பத்திரிகை, இதழ் முதலியவை பெருமளவில் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை தேசிய இன மொழியில் வெளியிடப்பட்ட நூல்கள் மட்டுமே 3400 வகைகளுக்கும் அதிகமாகும்.
1 2 3 4