|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
சீன தேசிய இன கல்வி
கல்வியானது, அறிவியல் தொழில் நுட்பம் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும். தேசிய இன கல்வி வளர்ச்சிக்காக, பல சிறப்பு கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் சீன அரசு செயல்படுத்தியுள்ளது. சிறுபான்மை தேசிய இனங்கள் கல்வியை வளர்ப்பதற்கு உதவி வழங்குவது, ஜனநாயக்க கல்விக்கான சிறப்பு நிர்வாக அமைப்புகளை உருவாக்குவது, தேசிய இன கல்வியை சுந்திரமாக வளர்க்கும் உரிமையை சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் தேசிய இன தன்னாட்சி பிரதேசங்களுக்கும் வழங்குவது, தேசிய இன மொழி கல்வி மற்றும் இரட்டை மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது, சிறுபான்மை தேசிய இன மொழி பாடத்தை மேம்படுத்துவது, சிறுபான்மை தேசிய இன ஆசிரியருக்கான பயிற்சியை வலுப்படுத்துவது, சிறுபான்மை தேசிய இனங்களுக்கும், தேசிய இன பிரதேசங்களுக்கும் சிறப்பு ஒதுக்கீடு செய்வது, பலதரப்பட்ட தேசிய இன பள்ளிகளை நிறுவுவது, மாணவர்களை சேர்ப்பதிலும் வாழ்க்கையிலும் சிறுபான்மை தேசிய இன மாணவர்களுக்கு சிறப்பு சலுகை தருவது, தேசிய இன பிரதேசங்களுக்கு உதவிட வளர்ந்த பிரதேசங்களை அணி திரட்டுவது ஆகியவை மேற்கூறிய கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும் அடங்கும்.
சிறுபான்மை தேசிய இன பிரதேசங்களிலுள்ள பள்ளி கல்வியை வளர்ப்பதற்காக, பல பயனுள்ள நடவடிக்கைகளை சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. பல்வேறு நிலைகளில் துவக்கப் பள்ளி, இடை நிலை பள்ளி, பல்கலைக்கழகம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. பொதுவாக பயன்படக் கூடிய எழுத்துக்களை கொண்ட தேசிய இனங்கள் துவக்கப் பள்ளியிலும் இடை நிலை பள்ளியிலும் சொந்த இன மொழியில் கற்பிக்கப்படுகின்றன. சீனாவின் பல்வேறு பள்ளிகளிலும் பயின்ற சிறுபான்மை தேசிய இன மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. மேலும், சீனாவின் வட மேற்கு, வட கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளிலுள்ள சிறுபான்மை தேசிய இனங்கள் குழுமி வாழும் அனைத்து இடங்களிலும் உயர் கல்வி நிலையங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான பல்வேறு தேசிய இன பட்டதாரி மாணவர்கள் உருவாகியுள்ளனர்.
புள்ளி விபரங்களின் படி, சீனாவின் 55 சிறுபான்மை தேசிய இனங்களில் பட்டதாரி மாணவர்கள் உள்ளனர். சில தேசிய இனங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் உள்ளனர்.

(சீன மத்திய தேசிய இன பல்கலைக்கழகம்)

|