சீனத் தேசிய இனம்
சீனா, பல தேசிய இனங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த நாடாகும். உலகில் மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஒன்றாகும். 56 தேசிய இனங்கள் உள்ள சீனாவில், தற்போது மக்கள் தொகை 130 கோடி.
சீனாவின் தேசிய இனங்களில், ஹன், மங்கோலிய, ஹூய், திபெத், உய்கூர், மியாவ், யீ, சுவாங், பூயி, கொரிய, மஞ்சு, தொங், யாவ், பை, து ச்சியா, ஹானி, ஹசாக், தை, லீ, லிசு, வா, ஷே, காவ்ஷான், லாஹூ,ஷூய், துங்சியாங், நாசி, ஜிங்போ, கேர்கெச்சி, து, தாவொர், முலாவ், ச்சியாங், புலாங், சாலா, மாவ்நான், கேலாவ், சிபோ, ஆக்ஷாங், புமி, தஜீக், நூ, உஸ்பெக், ரஷிய, எவெக், தேஆங், பாவ்ஆன், யூகு, ஜிங், தாதார், தூலோங், எலுன்க்ஷுன், ஹேச்சே, மன்பா, லோபா, ஜீநோ ஆகிய இனங்கள் இடம்பெறுகின்றன. தவிர, தற்போது சீனாவில், அவ்வளவாக அறியப்படாத சில இனங்களைச் சேர்ந்த மக்களும் உள்ளனர்.
சீன மக்களில் 92 விழுக்காடினர் ஹன் இன மக்கள். சிறுபான்மை தேசிய இன மக்கள் தொகை, மொத்த மக்கள் தொகையில் 8 விழுக்காட்டுக்கு மேல் இருக்கிறது. ஹன் இனம் தவிர 55 தேசிய இனங்கள் உள்ளன. ஹன் இனத்தை விட, அவற்றின் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், சிறுபான்மை தேசிய இனம் என அழைக்கப்படுகிறது. இந்த சிறுபான்மை தேசிய இன மக்கள், சீனாவின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பிரதேசத்தில் பரவி வாழ்கின்றனர்.

காலப் போக்கில், ஹன் இன மக்களை முக்கியமாகக் கொண்ட, பல தேசிய இன மக்கள் ஒரே இடத்தில் கலந்து வாழும் நிலைமையும் ஒரு சிறுபான்மை தேசிய இன மக்கள் ஒரே இடத்தில் குழுமி வாழும் நிலைமையும் உருவானது. 55 சிறுபான்மை தேசிய இனங்களில், ஹூய் மற்றும் மஞ்சு இன மக்கள் சீன மொழியைப் பொதுவாக பயன்படுத்துகின்றனர். ஏனைய இனத்தவர்கள், சொந்த மொழி அல்லது சீன மொழியைப் பயன்படுத்துகின்றனர். பல ஆண்டுகளாக, 96 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில், 56 தேசிய இனங்கள் கூடி வாழ்ந்து, குடும்பங்களை வளர்த்து, நீண்டகால வரலாற்றையும் ஒளிமயமான பண்பாட்டையும் உருவாக்கி வருகின்றன.
1 2 3 4 5