• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சுருக்கம்]

மக்கள் தொகை 1 லட்சத்துக்கு உட்பட்ட தேசிய இனம்

சீனாவில், மொத்தமாக 20 சிறுபான்மை தேசிய இனங்களின் மக்கள் தொகை 1 லட்சத்துக்குள் இருக்கின்றது. இதில், புலாங், தஜீக், ஆக்ஷங், புமி, எவெக், நூ, ஜிங், ஜீநோ, தேஆங், பாவ்ஆன், ரஷிய, யூகு, உஸ்பேக், மன்பா, Oroqen, தூலுங், தாதார், ஹேச்சே, காவ்ஷான், லோபா ஆகிய இனங்கள் அடங்குகின்றன.

தூலோங் இனம்

7400 மக்கள் தொகை கொண்ட தூலோங் இனம், யு நான் மாநிலத்தின் கோங் சான் தூலோங் மற்றும் நூ இன தன்னாட்சி மாவட்டத்தின் தூலோங் ஆற்றுப்பாள்ளத்தாக்கில் குழுமி வாழ்கிறது. இவர்கள் பயன்படுத்தும் தூலோங் மொழி, ஹான்-திபெத் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழிக்கு எழுத்துக்கள் இல்லை. தூலோங் இன மக்கள், அனைத்து பொருட்களுக்கும் ஆத்மா உண்டு என்பதை நம்பி, இயற்கைப் பொருளை வழிபடுகின்றனர். யுவான் வமிச காலத்தின் வரலாறு எனும் நூலில் லி சியாங் பழக்கவழக்க பகுதியில் தூலோங் இனத்தின் இனப் பெயர், முதல் முறையில் தென்படுகிறது. அப்போது, அது ஜியாவ் (qiao) என்று அழைக்கப்பட்டது. மிங் மற்றும் சிங் வமிச லாகத்தில் இது ஜியு (qiu) அல்லது ஜூ (qu) என அழைக்கப்பட்டது. நவ சீனா நிறுவப்பட்ட பின், தூலோங் என்ற பெயரை விரும்பி ஏற்றுக்கொண்டனர். முன்னொரு காலத்தில், தூலோ இனத்தின் சமூக உற்பத்தி திறன் குன்றிய நிலையில் இருந்தது. மரம் மற்றும் மூங்கிலினலான எளிய கருவிகளின் துணையுடன், உழவுத் தொழிலில் தூலோ இன மக்கள் ஈடுபட்டனர். சாகுபடி, மீன் பிடிப்பு, வேட்டையாடுதல் ஆகியவை இவர்களின் இன்றியமையாத உற்பத்தி முறையாகும். 1949ஆம் ஆண்டில் நவ சீனா நிறுவப்பட்ட பின், இவ்வினத்தின் பொருளாதார பின்னடைவு முழுமையாக மாறி விட்டது. தூலோங் இனத்தவர் சுறுசுறுப்பாக வேலை செய்யக் கூடியவர்கள். விருந்தோம்பலில் சிறந்து விளங்குபவர், நண்பர்களைக் கவனிப்பவர். ஒரு குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை என்றால், கிராம மக்கள் அனைவரும் உதவி வழங்குகின்றனர். வேட்டையாடிய மிருகங்களில் ஒரு பங்கு வேட்டையாளர்களுக்கு தரப்படும். அவர்கள் சொன்ன சொல்லை மீறுவதில்லை. சிறப்பான எளிய ஒழுக்கம் அவர்களின் சிந்தனையில் இருக்கிறது. இரவில் கதவை அடைப்பதில்லை, தெருவில் பொருட்கள் கிடைந்தால் எடுத்து வைக்கக் கொள்வதில்லை என்பது தூலோங் இனத்தின் பாரம்பரிய ஒழுக்கநெறியாகும்.

ஜிநோ இனம்

20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஜிநோ இனம், சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள யுன் நான் மாநிலத்து சி ஷுவாங் பான் நா பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கம்பீரமான மலையில் குழுமி வாழ்கிறது. அவர்கள் பயன்படுத்தும் ஜிநோ மொழி, ஹான்-திபெத் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. சொந்த இன எழுத்துக்கள் இல்லை. அனைத்து பொருட்களுக்கும் ஆத்மா உண்டு என்பது இவ்வினத்தினர் கொண்டுள்ள நம்பிக்கை. மூதாதையரை வழிபடும் பழக்கம் பரவலாக உள்ளது. இவ்வினத்தின் தோற்றம் பற்றிய எழுத்து மூல பதிவு இல்லை. சு கெ லியாங் என்பவரை ஜிநோ இன மக்கள் வழிபடுகின்றனர். பு அர், மோ ஜியாங், மேலும் தொலைவிலுள்ள வட பகுதியிலிருந்து கூட குடிபெயர்ந்த அவர்கள், தென் பகுதியில் போரிடும் சு கெ லியாங்கின் படையில் ஒரு பகுதியினர் ஆவர் என்று சொல்லப்படுகிறது. நவ சீனா நிறுவப்பட்ட பின், தொடக்கக்கால சமூகத்திலிருந்து சோஷலிச சமூகத்தில் ஜிநோ இனம் நேரடியாக அடியெடுத்து வைக்கிறது. அப்போது முதல்தான், மூங்கிலில் செதுக்கி வைத்து நிகழ்ச்சிகளை நினைவுப்படுத்துவது, பொருள் கொடுத்து வேறு பொருள் வாங்கும் பண்ட மாற்று முறை, பேய்பிசாசு விரட்டி நோய்க்கு சிகிச்சை அளிப்பது முதலிய பிற்பட்ட பழக்கவழக்கங்கள் முற்றுமுழுதாக மாற்றப்பட்டுள்ளன. இப்போது தான், ஜிநோ இனத்தினர், அதிகாரி, மருத்துவர், வணிகர், வேளாண் துறை தொழில் நுட்ப வல்லுநர் போன்ற பெரிய பதவிகளில் சேர்ந்து, பெரும் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

Oroqen இனம்

8000 மக்கள் தொகை கொண்ட Oroqen இனம், உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசமும் ஹெய் லுங் ஜியாங் மாநிலமும் சங்கமிக்கும் பிரதேசத்திலுள்ள பெரிய சிங் ஆன் மற்றும் சிறிய சிங் ஆன் மலைத் தொடர்ச்சியில் குழுமி வாழ்கின்றது. உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹுலுன்பெர் லீக்கின் கீழ் Oroqen தன்னாட்சி மாவட்டம் உள்ளது. Oroqen பயன்படுத்தும் Oroqen மொழி, அல்தை மொழிக் குடும்பத்தைச் சேர்கிறது. இதற்கு சொந்த எழுத்துக்கள் இல்லை. ஹான் இன எழுத்துக்கள் பயன்படுகின்றன. Oroqen என இவ்வின மக்கள் தன்மைத் தாமே அழைக்கின்றனர். மலையில் இருக்கும் மக்கள் என்பது இதன் பொருள். இப்பெயரானது சிங் வமிச தொடக்கத்தின் வரலாற்றுத் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வினத்தவர் நீண்டகாலமாக வேட்டையாடலை முக்கிய வாழ்க்கை தொழிலாகக் வழிமுறையாகக் கொண்டுள்ளனர். வனப் பொருட்களை சேகரிப்பது, மீன் பிடிப்பது ஆகியவை அவர்களின் துணை வழிமுறைகளாகும். அனைத்து ஆண்களும் சிறந்த குதிரை சவாரி செய்பவர், அம்பு எய்துபவர். பல்வேறு மிருகங்களின் பழக்கங்கள் அவர்களுக்கும் தெரியும். வேட்டையாடல் அனுபவமும் அவர்களுக்கு உண்டு. 1940ஆம் ஆண்டுகளில் இவ்வினமானது, பழங்குடி கம்யூனில் வசித்த, வேட்டையாடலில் ஈடுபடும் நாடோடி இனமாக இருந்தது. வேட்டையாடப்பட்ட பொருட்கள் இனத்தவரிடையே சராசரியாகப் பங்கு போடப்படுகின்றன. தொடக்க சமூதாயத்தில் கூட்டு நுகர்வு, சராசரி பங்களிப்பு ஆகிய வழக்கங்கள் நிலவின. அதிலும் முதியோர், பலவீனமானவர், காயமுற்றோர், ஊனமுற்றோர் ஆகியோருக்கு, கூடுதலமான பங்கு தரப்பட்டது. நவ சீனா நிறுவப்பட்ட பின், Oroqen இனத்தவர் சோஷலிச சமூகத்தில் அடியெடுத்து வைத்து, இப்போது, குடியிருப்பு வாழ்க்கையை பின்பற்றுகின்றனர். வேட்டையாடலை கைவிட்டு, வன விலங்குகள் மற்றும் காடுகளின் பாதுகாவலராக மாறியுள்ளனர். Oroqen இன மக்கள் திறமைமிக்கவர்கள். Birch மரப்பட்டையினால், உடை, காலணி, பெட்டி, வாளி, Birch மரப்பட்டையாலான லேசான படகு கூட உள்ளிட்ட அழகான கை வினை பொருட்களை அவர்கள் தயாரிக்க முடியும். அழகான உருவப்படம் கொண்ட இப்பொருட்கள், நுண்மையான வேலைப்பாடுகளை உடையது. நீண்டகாலம் பயன்பாட்டுக்குரியவை. சாமான் மதத்தின் மீது Oroqen இன மக்கள் பொதுவாக நம்பிக்கை கொள்கின்றனர். இயற்கைப் பொருட்களை அவர்கள் வழிபடுகின்றனர். அனைத்து பொருட்களுக்கு ஆத்மா உண்டு என்பதை நம்புகின்றனர். மூதாதையரை வழிபாடு அவர்களிடையே பரவலாகக் காணப்படுகின்றது.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040