• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சுருக்கம்]

சீன தேசிய இன கொள்கை

சீனா, ஒன்றிணைந்த பல தேசிய இனங்களைக் கொண்ட நாடாகும். சமத்துவம், ஒற்றுமை, பரஸ்பர உதவி என்ற தேசிய இன கொள்கையை சீனா செயல்படுத்துகிறது. சிறுப்பான்மை தேசிய இன மத நம்பிக்கையின் சுதந்திரத்தையும் பழக்கவழக்கங்களையும் சீனா மதித்து பேணிக்காக்கிறது.

தேசிய இன பிரதேச தன்னாட்சி அமைப்பு முறை, சீனாவின் அரசியல் அமைப்பு முறைகளில் முக்கிய ஒன்றாகும். அது, அரசின் ஒன்றிணைந்த தலைமையில், பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்களும் தனது வாழும் பிரதேசங்களில் பிரதேச தன்னாட்சியை செயல்படுத்தி, தன்னாட்சி அமைப்பை உருவாக்கி, தன்னாட்சி உரிமையை செயல்படுத்துவதாகும். தேசிய இன தன்னாட்சி செயல்படும் இடங்களில், அந்தந்தப் பகுதிகளின் நடைமுறைக்கு ஏற்ப, நாட்டின் சட்டத்தையும் கொள்கையையும் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவாதம் தரப்படுகிறது. சிறுபான்மை தேசிய இன ஊழியர்களுக்கும் சிறப்பு தொழில் திறமைசாலிகளுக்கும் தொழில் நுட்ப பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்வேறு சிறுபான்மை தேசிய இன மக்கள் முழு நாட்டின் மக்களுடன் இணைந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சோஷலிஸ நவீன மயமாக்க கட்டுமானத்தில் ஈடுபட்டு, தேசிய இன தன்னாட்சி பிரதேச பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை விரைவுபடுத்தி, ஒன்றுப்பட்ட வளமிக்க தேசிய இன தன்னாட்சி பிரதேசத்தை உருவாக்குகின்றனர்.

பல்லாண்டுகால நடைமுறையில், தேசிய இன பிரச்சினைகள் தொடர்பான அடிப்படை கருத்துகளையும் கொள்கைகளையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியுள்ளது.

அவை பின் வருமாறு—

தேசிய இனத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் மறைவு ஒரு நீண்டகால வரலாற்றுப் போக்காகும். தேசிய இன பிரச்சினைகள் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும்.

சோஷலிஸ கட்டம், பல்வேறு இனங்கள் கூட்டாக வளமடையும் கட்டமாகும். அவற்றுக்கிடையில் பொது அம்சங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், தேசிய இன தனிச்சிறப்பும் வேற்றுமையும் தொடர்ந்து நிலவும்.

தேசிய இன பிரச்சினை, சமூக பிரச்சினைகளில் ஒரு பகுதியாகும். அனைத்து சமூக பிரச்சினைகளையும் தீர்ப்பதில் தேசிய இன பிரச்சினைக்கு தீர்வு படிப்படியாக காணப்பட முடியும். சீனாவின் தற்போதைய தேசிய இன பிரச்சினைகளை சோஷலிஸ லட்சியத்தின் அடிப்படையில் தான் படிப்படியாக தீர்க்க முடியும்.

பல்வேறு இனங்களும் தாய்நாட்டின் நாகரிகத்துக்கு பங்காற்றியுள்ளன. சம நிலையில் கையாளப்பட வேண்டும். பல்வேறு தேசிய இன மக்களின் ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் ஒன்றிணைப்பு பேணிக்காக்கப்பட வேண்டும்.

பொருளாதாரத்தை வளர்ப்பது சோஷலிஸத்தின் அடிப்படை கடமையாகும். இது தற்போது சீனாவின் தேசிய இன பணியின் அடிப்படை கடமையாகும். பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றுக்கு ஒன்று உதவி வழங்கி, கூட்டாக முன்னேற்றமும் வளமும் அடைய வேண்டும்.

தேசிய இன தன்னாட்சி அமைப்பு முறையானது, தேசிய மார்க்சிஸ தத்துவத்துக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றிய முக்கிய பங்காகும். சீன தேசிய இன பிரச்சினைகளைத் தீர்க்கும் அடிப்படை முறை அதுவாகும்.

ஒழுக்கமும் திறமையும் வாய்ந்த சிறுபான்மை தேசிய இன ஊழியர் அணியை உருவாக்குவது, தேசிய இன பணியைச் செவ்வனே செய்வதற்கும் தேசிய இன பிரச்சினையை தீர்ப்பதற்கும் திறவுகோலாகும்.

தவிரவும், தேசிய இன பிரச்சினைகளும் மத பிரச்சினைகளும் அடிக்கடி பின்னி பிணைந்துள்ளன. தேசிய இன பிரச்சினைகளைக் கையாளும் போது, மத கொள்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தவிர, சிறுபான்மை தேசிய இன பிரதேசங்களின் பொருளாதார, பண்பாட்டு மற்றும் கல்வி லட்சியத்தை விரைவுபடுத்தி, மத நம்பிக்கையாளர் உள்ளிட்ட சிறுபான்மை தேசிய இன மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதோடு, சிறுபான்மை தேசிய இனங்களின் மத நம்பிக்கையை மதிப்பதற்கும் பண்பாட்டு மரபுச் சின்னத்தை பேணிக்காப்பதற்கும் சீனா அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. மத பண்பாடு உள்ளிட்ட தேசிய இன பண்பாட்டு மரபுத் சின்னத்தையும் கலையையும் கண்டறிந்து, சேகரித்து, ஆராய்ந்து வெளியிடப்படுகின்றன. சிறுபான்மை தேசிய இன பிரதேசங்களில் உள்ள வரலாறு மற்றும் பண்பாட்டு மதிப்புக்குரிய கோயில்களுக்கும் மத வசதிகளுக்கும் பெரும் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040