சீனியர் பள்ளி நுழைவுத் தேர்வு
சீனாவில் ஜூனியர் பள்ளியிலிருந்து சீனியர் பள்ளிக்குச் செல்வதற்கான தேர்வு, சீனியர் பள்ளி நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகின்றது. ஜுனியர் பள்ளி படிப்பை முடித்தவர்களில் 60 விழுக்காட்டினர் மட்டும் சீனியர் பள்ளிகளில் நழைய முடியும். சீனியர் பள்ளியிலிருந்து பல்கலைகழகத்தில் நுழைவோர் வகிக்கும் விகிதத்தை விட இது குறைவு. அதனால், இது, மிகவும் கடினமான தேர்வு என்று கருதப்படுகிறது.
பல்வேறு இடங்களின் கல்வி வாரியங்கள் ஒரே மாதிரி கேள்வித் தாளை அளிக்கிறன. சீன மொழி, அன்னிய மொழி, கணிதம், இயற்பியல், வேதியியல் முதலியவை தேர்வில் இடம்பெறுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் திங்களில் இது நடைபெறுகிறது.
இத்தேர்வில் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றால் தான், சீனியர் பள்ளியில் சேர முடியும். பின்னர், பல்கலைக்கழகத்தில் பயிலும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில், வேலை வாய்ப்பும் கிடைக்கும். இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் சீனியர் பள்ளியில் சேர முடியாது. வேலை வாய்ப்பு பெறும் நிலைமையை அவர்கள் எதிர்நோக்குகின்றனர். அதனால், இத்தேர்வு, தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்வு என்று சிலர் கருதுகின்றனர்.

1 2 3 4