சான்றிதழ் தேர்வு
பட்டக் கல்வியுடன் தொடர்புடைய தேர்வு தவிர, சீனாவில் சான்றிதழ் பெறுவதற்கான தேர்வுகளும் நடைபெறுகின்றன. இத்தேர்வுகள் வேலை வாய்ப்பை அதிகரித்து, பணி ஆற்றல் அல்லது தொழில் திறனை வெளிப்படுத்த முடியும் என்று கருதப்படுகின்றது.
தற்போது, சீனாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொள்ளும் சான்றிதழ் தேர்வுகளில், அன்னிய மொழி, கணிணி, இசை, ஆடல், சட்டம், அக்கவுண்டிங் ஆகியவை இடம்பெறுகின்றன. தவிர, சீனப் பொருளாதார வளர்ச்சியின் உலகமயமாக்கத்துடன், சர்வதேச தொழில் தேர்வுகள் சீனாவில் நுழையத் துவங்கியுள்ளன.
சான்றிதழ் பெற்றவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் பொருட்டு, சீனாவில், பெரும்பாலான சான்றிதழ் தேர்வுகள் வகைப்படுத்தப்படுகின்றன.
இதனால், பல சான்றிதல் தேர்வுகள் ஒரு முறையில் நிறைவேற முடியாதவை. தேர்வில் கலந்து கொண்டோர் மேலும் கல்வி பயின்று, ஆற்றலை உயர்த்திட வேண்டும்.

1 2 3 4