மேற்படிப்புக்கான தேர்வ
உயர் கல்வி நிலையங்களும் ஆய்வு நிறுவனங்களும் ஆராய்ச்சி மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான தேர்வு இது; முதுகலை பட்டத்துக்காகவும் டாக்டர் பட்டத்துக்காகவும் 2 வகை தேர்வு நடத்தப்படுகிறது.
முதுகலை பட்டத்துக்கான தேர்வில் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை இடம்பெறுகின்றன. எழுத்து தேர்வில், பொதுப் பாடங்களுக்கு தனியொரு தேர்வுத் தாளை சீனக் கல்வி அமைச்சகம் அளித்து, சேர்க்கைக்கான குறைந்த பட்ச மதிப்பெண்ணை உறுதிப்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, கலைத் துறையில் பதிவு செய்யும் மாணவர்கள், அரசியல், அன்னிய மொழி ஆகிய தேர்வுகளில் கலந்து கொள்கின்றனர். அறிவியல் துறையில் பதிவு செய்யும் மாணவர்கள் அரசியல், அன்னிய மொழி, கணிதம் ஆகிய தேர்வுகளில் கலந்து கொள்கின்றனர். சிறப்புத் துறை தேர்வின் உள்ளடக்கம், சேர்க்கைக்கான குறைந்த பட்ச மதிப்பெண்ணை உயர் நிலை நிறுவனங்களும் ஆய்வு நிறுவனங்களும் தீர்மானிக்கின்றன. எழுத்து தேர்வில் ஒரு மாணவர் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்றால், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள முடியும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்ணுக்கேற்ப, போட்டித் தேர்வு மூலம் உயர் கல்வி நிலையங்களும் ஆய்வு நிறுவனங்களும் மாணவர்களைத் தெரிவு செய்கின்றன.
டாக்டர் பட்டத்துக்கான தேர்வுக்கு உயர் நிலைக் கல்வி நிலையங்களும் ஆய்வு நிறுவனங்களும் ஏற்பாடு செய்கின்றன. ஒரு சிறப்புத்துறையில் பெயர் பதிவு செய்யும் மாணவர், அதில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். அன்னிய மொழி, 2-3 சிறப்பு துறைகளின் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் அவர் கலந்து கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளில், வேலை வாய்ப்புக்கான நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது. மேற்படிப்புக்கான தேர்வில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளது. புதிதாக மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் விகிதாசாரம் குறைவு. தவிர, கல்வி அமைப்பு முறையின் சீர்திருத்தம் காரணமாக, மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான தேர்வு தொடர்பாக, உயர் கல்வி நிலையங்களும் ஆய்வு நிறுவனங்களும் முடிவெடுக்கும் அதிகாரம் விரிவடைகின்றது.

1 2 3 4