உயர் கல்வி நிலையங்களுக்கான நுழைவுத் தேர்வு
சீனாவில் உயர் கல்வி நிலையங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. சீனக் கல்வி துறை அமைச்சகம் வெளியிட்ட தேர்வு திட்டத்தின் வழிகாட்டலில், அரசு அல்லது மாநில நிலை கல்வி வாரியங்கள் தனியொரு தேர்வுத் தாளை அளிக்கின்றன. ஆண்டுதோறும் ஜூன் 7ந் நாள், இத்தேர்வு துவங்குகின்றது. இது, 2-3 நாட்கள் நீடிக்கின்றது.
தற்போது இத்தேர்வின் உள்ளடக்கம் "மூன்று+X"என்று அழைக்கப்படுகிறது. மூன்று என்பது, சீன மொழி, கணிதம், அன்னிய மொழி ஆகியவற்றைக் குறிக்கிறது. முழு நாட்டிலும் பல்வேறு மாநிலங்களிலும் நடத்தப்பட்ட தேர்வுகளில் வெவ்வேறான பாடங்களை X குறிக்கின்றது. சில பிரதேசங்களில் கலைத் தேர்வு அல்லது அறிவியல் தேர்வை இது குறிக்கின்றது. அதாவது, கலைத் துறையில் பெயர் பதிவு செய்யும் மாணவர்கள், கலைத் தேர்வில் கலந்து கொள்கின்றனர். அறிவியல் துறையில் பெயர் பதிவு செய்யும் மாணவர்கள் அறிவியல் தேர்வில் கலந்து கொள்கின்றனர். சில பிரதேசங்களில், கலைத் தேர்வு அல்லது அறிவியல் தேர்வை குறிப்பதுடன், பதிவு செய்யும் சிறப்புத் துறை மற்றும் உயர் கல்வி நிலையங்களின் தேவைக்கிணங்க, மாணவர் தெரிவு செய்யும் இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு ஆகியவற்றைக் குறிக்கிறது.
சீனாவில் இத்தேர்வில் மிகவும் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் உயர் நிலைக்கல்வி நிலையங்கள் புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் அளவு அதிகரிப்பதுடன், மாணவர்கள், அவர்களின் பெற்றோர் ஆகியோரின் நிர்ப்பந்தம் தணிவடைந்துள்ளது என்றும், ஆண்டுதோறும் இத்தேர்வு நடைபெறும் போது, முழு சமூகமும் அதன் மீது கவனம் செலுத்துகிறது.

1 2 3 4