• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம்
சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம்  

கடந்த சில ஆண்டுகளாக, அறிவியல் மற்றும் கல்வி மூலம் நாட்டை வளர்க்கும் திட்டப்பணியை சீன அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில் மிகவும் கவனம் செலுத்தி, முதலீட்டை அதிகரித்துள்ளது. 2003ஆம் ஆண்டில், இதற்காக 15 ஆயிரம் கோடி யுவானுக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டது. இது, மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 1.35 விழுக்காடு ஆகும்.

சீன அரசின் திட்டங்கள் மூலமாக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பணிகள், நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது, அடிப்படை ஆராய்ச்சி, புதிய உயர் தொழில் நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் அகழ்வு, வேளாண்மை, புதிய உயர் தொழில் நுட்ப தொழில்களின் வளர்ச்சி, விண்வெளிப் பயணத் தொழில் நுட்பம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளுடன் சீனாவின் முக்கிய அறிவியல் தொழில் நுட்ப திட்டங்கள் தொடர்பு கொண்டுள்ளன. சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் ஏற்பாட்டில், நிபுணர் குழுக்கள் இத்திட்டங்களை விவாதித்து, விதிகளை வகுத்து, ஏலம் முறையில், அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களை தேர்ந்தெடுக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள், தக்க ஆய்வு நிதிகளை பெற்று, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கடமையை ஏற்கின்றன.

பல ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், முழுமையான ஆற்றலை சீனா பெற்றுள்ளது. சில அடிப்படை ஆராய்ச்சித் துறைகளிலும், சில புதிய உயர் தொழில் நுட்பத் துறைகளிலும் சீனாவின் ஆராய்ச்சி சாதனைகள், மேம்பட்ட சர்வதேச நிலையை எட்டியுள்ளன அல்லது நெருங்கியுள்ளன. சீன அறிவியல் அறிஞர்கள் சர்வதேச வெளியீடுகளில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை, 2003ஆம் ஆண்டில் உலகில் 5வது இடம் வகிக்கின்றது. சீன நாட்டில், விண்ணப்பிக்கப்படும் கண்டுபிடிப்புக் காப்புரிமைகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகின்றது. சீனாவின் புத்தாக்க ஆற்றல் உயர்ந்து வருகின்றது என்பதை இது சரியாக வெளிப்படுத்துகின்றது.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040