• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம்

அரசு நிலை அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி திட்டங்கள்

அடிப்படை ஆய்வுத் திட்டம்

"நாட்டின் முக்கிய அடிப்படை ஆய்வு வளர்ச்சி திட்டம்", அடிப்படை ஆய்வுத் துறையில் சீனாவின் அரசு திட்டமாகும். 1997ஆம் ஆண்டின் மார்ச் திங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தத் துவங்கியது. இதனால், இது "973 திட்டம்" என அழைக்கப்படுகின்றது.

வேளாண்மை, எரியாற்றல், தகவல், மூலவளச் சூழல், மக்கள் தொகை மற்றும் உடல் நலம், மூல பொருட்கள் உள்ளிட்ட துறைகளும், தேசிய பொருளாதாரம், சமூக வளர்ச்சி, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கிய அறிவியல் பிரச்சினைகளும் 973 திட்டத்தில் முக்கியமாக ஆய்வு செய்யப்படுகிறன. இத்திட்டம், பல பிரிவுகளைக் கொண்டது. ஒட்டுமொத்த ஆய்வு மேற்கொண்டு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆதாரக் கோட்பாடுகளையும் அறிவியல் அடிப்படையையும் வழங்குகிறது.

கடந்த சில ஆண்டுகளில், இத்திட்டத்துக்காக சில நூறு கோடி யுவானை சீன அரசு ஒதுக்கீடு செய்து, 300க்கு அதிகமான திட்டப்பணிகளைத் துவக்கியுள்ளது. தற்போது, மிக முன்னதாக துவக்கப்பட்ட திட்டப்பணிகள், பயனளிக்கத் தொடங்கியுள்ளன. நமி தொழில் நுட்பம், மரபணு, மூளை அறிவியல், பழங்கால உயிரினவியல் உள்ளிட்ட துறைகளில் சீன அறிவியல் அறிஞர்களின் ஆராய்ச்சி சாதனைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. எடுத்துக்காட்டாக, 2002ஆம் ஆண்டில், சீன அறிவியலாளர்கள், நெல்லின் மரபணுவை அளவீட்டு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியதன் அடிப்படையில், கடந்த ஆண்டில், குளோனிங் முறையில் நெல்ரகம் இனபெருக்கப்பட்டது.

புதிய உயர் தொழில் நுட்ப ஆய்வு திட்டம்

சீனாவின் உயர் தொழில் நுட்ப ஆய்வு வளர்ச்சி திட்டம், ஓர் அரசுத் திட்டமாகும். 1986ஆம் ஆண்டின் மார்ச் திங்களில், சீனாவின் 4 புகழ் பெற்ற அறிவியலாளர்கள் இத்திட்டத்தை முன்வைத்தனர். இதனால், இத்திட்டம், "863 திட்டம்" என அழைக்கப்படுகின்றது.

உலகில் உயர் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில் காணப்படும் போக்கு, சீனாவின் தேவை, ஆற்றல் ஆகியவற்றிலிருந்து "863 திட்டம்" தொடங்கி, உயிரினத் தொழில் நுட்பம், விண்வெளித் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம், லேசர் தொழில் நுட்பம், இயந்திரமயமாக்க தொழில் நுட்பம், எரியாற்றல் தொழில் நுட்பம், புதுவகை மூல பொருள் உற்பத்தி நுட்பம் உள்ளிட்ட 7 துறைகள் சம்பந்தபட்ட 15 பிரச்சினைகளை, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய பணிகளாகக் கொண்டுள்ளது.

"863 திட்டத்தை" நடைமுறைப்படுத்திய மூலம், சீன நாட்டின் நிலைமைக்கு ஏற்ற உயர் தொழில் நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டம் சீனாவில் படிப்படியாக உருவாயிற்று. ஒட்டுமொத்தமான ஒரு கட்டமைப்பும் உருவானது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தளங்களும் நிறுவப்பட்டன. புதிய தலைமுறை உயர் அறிவியல் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சாதனைகள் பெறப்பட்டுள்ளன. முக்கிய தொழில் நுட்பங்களில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. சீனாவின் உயர் தொழில் நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிலை பெரிதும் உயர்ந்துள்ளது. சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப ஆற்றல் வலுப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு "ஃபான் சோ" மற்றும் "லோன் சின்" சில்லுகளை ஆராய்ந்து தயாரிப்பதில் சீனா வெற்றி பெற்றுள்ளது. சீனத் தகவல் தொழிலில் சில்லு இல்லை என்ற ஒரு நிலை முடிவுக்கு வந்தது. "லியன் சியான் சன் தங் 6800" சூபர் ரக கணிணியின் செயல்திறன், உலகின் முதல் 500 நிறுவனங்களில் 5வது இடம் வகிக்கின்றது.

வேளாண் அறிவியல் தொழில் நுட்பத் திட்டம்

வேளாண் துறையில் சீனாவின் அறிவியல் தொழில் நுட்பத் திட்டம், "Xing Huo திட்டம்" என அழைக்கப்படுகின்றது. Xing Huo திட்டம், "சிறு மொறியில் இருந்து பெருந்தீ மூளுவதென்ற" சீனாவின் புகழ் பெற்ற கூற்றிலிருந்து வந்தது. வேளாண் துறையிலான அறிவியல் தொழில் நுட்பங்களை, ஒரு சிறுபொறி போல் நாடு முழுவதிலும் விரைவாக பரவச்செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

1986ஆம் ஆண்டில் "Xing Huo திட்டத்துக்கு" ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னேறிய பயன்மிக்க வேளாண் அறிவியல் தொழில் நுட்பங்களை உருவாக்கி, இந்த தொழில் நுட்பங்களை, கிராமப்புறங்களுக்கு அறிமுகப்படுத்தி, கோடானுகோடி விவசாயிகள், அறிவியல் தொழில் நுட்பத்தைச் சார்ந்து, கிராமப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு வழிகாட்டி, வட்டம் மற்றும் சிறு நகரத் தொழில் நிறுவனங்களின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்தி, கிராமப்புறத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த கல்வியறிவு தரத்தை உயர்த்தி, வேளாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் தொடர்ச்சியான, விரைவான, சீரான வளர்ச்சியை விரைவுபடுத்துவது இத்திட்டத்தின் நோக்கம்.

"Xing Huo திட்டம்", நடைமுறைக்கு வந்துள்ள பத்து ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், அதிகப்படியான வேளாண் அறிவியல் தொழில் நுட்பங்களை சீன அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து வளர்த்துள்ளனர். உயர் விளைச்சல் தரும் தரமான வேளாண் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். கிராமப்புறங்களில் சமூகமயமாக்க சேவை முறைமையை ஏற்படுத்தி, கிராமப் பொருளாதாரத்தை வளர்த்துள்ளனர். முன்னேறிய தொழில் நுட்பத்தையும், கிராமப்புற மூலவளத்தையும் பயன்படுத்தும் முன்மாதிரியான அறிவியல் தொழில் நுட்ப தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. கிராமப்புறம், வட்டம் மற்றும் சிறு நகரத் தொழிற்சாலைகளின் உற்பத்தி கட்டமைப்பை சீர்ப்படுத்துவதற்கு இது முன்மாதிரியாகியுள்ளது. கிராமப்புற தொழில் நுட்ப மற்றும் நிர்வாகத் திறமையாளர்களுக்கும், விவசாய தொழில் முனைவோர்களுக்கும் பயிற்சி தரப்பட்டுள்ளனர். 2003ஆம் ஆண்டில் மட்டுமே, சீன அறிவியலாளர்கள், பல வேளாண் அறிவியல் தொழில் நுட்பங்களையும், 300க்கு அதிகமான புதிய வேளாண் பொருள் வகைகளையும் இனபெருக்கி, ஒரு கோடி ஹெக்டர் நிலப்பரப்பில் இந்த புதிய பயிர் ரகங்களை பரவல் செய்தனர். புதுவகை நீர் பாசன நுட்பத்தை முன்வைத்தனர். இந்த புதிய நுட்பம் பயன்படுத்தப்பட்ட பிரதேசங்களில், 30 விழுக்காட்டுக்கு அதிகமான தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.

"Xing Huo திட்டம்" செயல்படுத்தப்பட்டதால், கிராமப்புறங்களில் புதுமுறை வேளாண்மை வளர்ந்துள்ளது. விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. அறிவியல் தொழில் நுட்பம் தான் செல்வம் என்பதை விவசாயிகள் உணர்ந்துள்ளனர். இதனால், இத்திட்டம், பல பல விவசாயிகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. சர்வதேச நண்பர்கள் பலர் இத்திட்டத்தை, சீன விவசாயிகளை வளம் தொழிக்கச்செய்யும் திட்டம் என கருதுகின்றனர்.

புதிய உயர் தொழில் நுட்ப சாதனைகளை பரப்பும் திட்டம்

"Huo Ju திட்டம்", சீனாவின் புதிய உயர் தொழில் நுட்ப சாதனைகளை பரப்பும் திட்டமாகும். சீனாவின் புதிய உயர் தொழில் நுட்ப தொழிலை வளர்ப்பதற்கு வழிகாட்டும் திட்டம் இதுவாகும். சீன அறிவியல் தொழில் நுட்பங்களின் மேம்பாட்டையும் உள்ளார்ந்த ஆற்றலையும் வெளிக்கொணர்த்து, சந்தையின் தேவைக்கு ஏற்ப, புதிய உயர் தொழில் நுட்ப சாதனைகளை வணிக நோக்குடன் பயன்படுத்துவதும், அதன் மூலம் தொழில்மயமாக்கத்தையும், உலகமயமாக்கத்தையும் தூண்டுவதும் இத்திட்டத்தின் நோக்கம். 1988ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கியது. மின்னணு மற்றும் தகவல், உயிரினத் தொழில் நுட்பம், புதிய மூல பொருட்கள், கதிர்வீச்சு நுட்பம், இயந்திரம் மற்றும் மின்சார தொழில், புதிய எரியாற்றல், எரியாற்றலின் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை இத்திட்டத்தின் முக்கியத்துறைகளாகும்.

தற்போது, சீனாவின் பல்வேறு இடங்களில் 53 அரசு நிலை புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலங்கள் நிறுவப்பட்டுள்ளன. 1991ஆம் ஆண்டு முதல் இது வரை, இவற்றின் முக்கிய பொருளாதார இலக்குகள் ஆண்டுக்கு சராசரியாக 40 விழுக்காடு அதிகரித்து வருகின்றன. சீனாவின் புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்தி, தேசிய பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய ஆற்றலாக இவை மாறியுள்ளன.

கடந்த ஆண்டு, இந்த 53 புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலங்களின் வருமானம் 2 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இவற்றில், பெய்ஜிங்கில் உள்ள Zhong Guan Cun அறிவியல் தொழில் நுட்ப மண்டலம், ஷாங்காய் புதிய உயர் அறிவியல் தொழில் நுட்ப மண்டலம் ஆகியவற்றின் வருமானம் 15 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. அவை, புகழ் பெற்ற "சீனாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு" என கருதப்படுகின்றன. புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலங்களில், தொழில் நுட்ப நிறுவனங்கள் பல நிறுவப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கணிணி துறையில் Lian Xiang, Fang Zheng, Zi Guang, தொலை தொடர்பு துறையில் Hua Wei, Da Tang ஆகிய நிறுவனங்கள் இந்த புதிய உயர் தொழில் நுட்ப மண்டலங்களில் நிறுவப்பட்டுள்ளன.

சீனாவில் மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்

சீனாவில் மனிதரை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டம், 1992ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இது, மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டது. முதலாவது கட்டத்தில், சீனாவின் விண்வெளிவீரர்களை விண்வெளிக்கு அனுப்புவது. இரண்டாவது கட்டத்தில், விண்வெளி தளங்களின் இணைப்பு தொழில் நுட்பத்தை தீர்த்து, குறுகிய காலத்துக்குள் மனிதர்களால் பராமரிக்கப்படும் விண்வெளி ஆய்வறையை விண்வெளிக்குள் செலுத்துவது. மூன்றாவது கட்டத்தில், நீண்டகாலமாக மனிதர்களால் பராமரிக்கப்படும் விண்வெளி நிலையத்தை உருவாக்கி, பெருமளவு விண்வெளி அறிவியல் சோதனை மற்றும் பயனீட்டுத் தொழில் நுட்பப் பிரச்சினைகளை தீர்ப்பது.

1999ஆம் ஆண்டின் இறுதியில், மனிதரை ஏற்றிச்செல்லும் முதலாவது பரவித்தல் சோதனை விண்வெளி ஓடமான "சென்செள" 1 விண்வெளி ஓடத்தை சீனா வெற்றிகரமாக செலுத்தி, மீட்டது. இதற்குப் பிந்திய 3 ஆண்டுகளில், மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி ஓடத்தை, மனிதர் இல்லாத நிலைமையில் செலுத்தி சோதனை பயணத்தை சீனா நடத்தியது. 2003ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள் 15ஆம் நாள், சீனா சுயமாக ஆராய்ந்து தயாரித்த, மனிதரை ஏற்றிச்செலும் முதலாவது விண்வெளி ஓடமான "சென்செள" 5 ஓடம் விண்வெளியில் ஏவப்பட்டது. Yang Li Wei, சீனாவின் முதலாவது விண்வெளிவீரராக மாறினார். "சென்செள" 5 விண்வெளி ஓடம் வெற்றிகரமாக ஏவப்பட்டது என்பது, ரஷியா மற்றும் அமெரிக்காவை அடுத்து, உலகில் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயண நடவடிக்கைகளில் சுயமாக ஈடுபடும் ஆற்றலுடைய மூன்றாவது நாடாக சீனா மாறியுள்ளதை கோடிட்டுக்காட்டியுள்ளது.

மனிதரை ஏற்றிச்செல்லும் ஓடம் ஏவப்பட்டதில் பயன்படுத்தப்பட்ட "சென்செள" 5 விண்வெளி ஓடமும், "Long March இரண்டு F" ராக்கெட்டும், மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத்துக்காக வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளன. "சென்செள" விண்வெளி ஓடத்தில் உந்து விசை அறை, திரும்பும் அறை, சுழலும் அறை ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. தற்போது உலகில் மிக பெரிய விட்டம் உள்ள விண்வெளி ஓடம் இதுவாகும். இது, விண்வெளிவீரர்கள் மூவரை ஏற்றிச்செல்லக் கூடியது. விண்வெளி ஓடம், வான்-தரை பயணத்தில் விண்வெளிவீரர்களை ஏற்றிச்செல்லும் சாதனமாகும். இது மட்டுமல்ல, பூமி மீதான கண்காணிப்பையும், விண்வெளி சோதனையையும் மேற்கொள்ளலாம். விண்வெளிவீரர்கள் திரும்பும் அறையில் தரைக்கு திரும்பிய பிறகு, விண்வெளி ஓடத்தின் சூழல் அறை விண்வெளியில் 6 திங்களுக்கு அதிகமான காலம் தங்கலாம். "சென்செள" விண்வெளி ஓடத்தைச் செலுத்த பயன்படும் "Long March இரண்டு F" ராக்கெட்டு, தற்போது, சீனாவில் மிக அதிக எடை, மிக நீண்டகால நீளம், மிக சிக்கலான கட்டமைப்பு உடைய ராக்கெட்டாகும்.

2005ஆம் ஆண்டில், "சென்செள" 6 விண்வெளி ஓடம் ஏவப்பட்டது. அப்போது, விண்வெளிவீரர்கள் பலரை விண்வெளி ஓடம் ஏற்றிச்செல்லும்.

சீனாவில் சந்திர மண்டல ஆய்வு திட்டப்பணிகள்

சீனாவில் சந்திர மண்டல ஆய்வு திட்டப்பணி, மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது கட்டத்தில் சந்திர மண்டலத்தை சுற்றி வரும் சந்திர மண்டல ஆய்வு செயற்கைக் கோள் செலுத்தப்படும். இரண்டாவது கட்டத்தில், சந்திர மண்டல ஆய்வுக் கலம், சந்திர மண்டலத்தில் சுலபமாக இறங்கி, ஆய்வுப் பணியை மேற்கொள்ளும். மூன்றாவது கட்டத்தில், ஆய்வு கலம், சந்திர மண்டலத்தில் ஆய்வு செய்து, மாதிரிகளைத் திரட்டிய பிறகு, பூமிக்கு திரும்புகிறது. தற்போது, முதலாவது கட்டத்தில் இத்திட்டப்பணி உள்ளது. இது, "Rao Yue" என்னும் சந்திர மண்டலத்தை சுற்றி வளையும் திட்டப்பணி" என அழைக்கப்படுகின்றது.

"Rao Yue திட்டப்பணி", 2004ஆம் ஆண்டின் ஜனவரி திங்களில் தொடங்கிது. சந்திர மண்டலத்தில் ஆய்வு மேற்கொள்ள, 2006ஆம் ஆண்டின் இறுதியில், சந்திர மண்டலத்தைச் சுற்றி வரும் ஆய்வு செயற்கைக் கோள் "Chang E" 1 செலுத்தப்படக்கூடும். சந்திரனின் முப்பரிமாணப் படத்தைப் பெற்று, ஆராய்வது, சந்திர மண்ணின் கனத்தை ஆராய்ந்து, சந்திர மண்டலத்தில் பரவியுள்ள பயனுள்ள பொருட்களின் தன்மையை ஆராய்வது, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளி சூழலை ஆய்வு செய்வது ஆகியவை முக்கிய பணிகளாகும்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, சீனாவின் விண்வெளி லட்சியம் வளர்ச்சியுற்று வருகின்றது. ராக்கெட்டு மற்றும் செயற்கை கோளைச் சுயமாக ஆராய்ந்து தயாரிக்கும் ஆற்றல் சீனாவுக்கு உண்டு. விண்வெளி ஓடமும் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மனிதரை ஏற்றிச்சென்ற விண்வெளி பயணம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்த போதிலும், சந்திர மண்டலத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்வதில் கடினமான தொழில் நுட்ப பிரச்சினைகள் இன்னமும் நிலவுகின்றன. இவற்றில், தொலைதூர இடைவெளி மிக கடினமான பிரச்சினையாகும். விண்வெளி கலம், 4 லட்சம் கிலோமீட்டருக்கு மேலாக பயணம் மேற்கொள்ளும்.

தற்போது, சீனாவில் சந்திர மண்டலத்தை சுற்றி வந்து ஆய்வு செய்யும் திட்டப்பணியில், ஆராய்ச்சி மற்றும் கட்டுப்பாட்டுத் தகவல் தொடர்பையும் தரைக் கட்டுப்பாட்டையும் சீராக்குதல் மற்றும் உருவாக்கம் நடைபெறுகின்றன. 2006ஆம் ஆண்டின் அக்டோபர் திங்களுக்குள் செயற்கைக் கோள் மற்றும் ராக்கெட்டு முறைமையின் ஆய்வு மற்றும் தயாரிப்புப் பணிகள் நிறைவேறும்.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040