சீனாவின் அறிவியல் ஆய்வு நிறுவனங்கள்
பல நாடுகளைப் போல், சீனாவிலும் அறிவியல் ஆய்வுப் பணிகளில் தனிப்பட்ட அமைப்புக்களும், உயர் கல்வி நிலையங்களுடன் அல்லது தொழில் நிறுவனங்களுடன் சார்புடைய அமைப்புக்களும் ஈடுபட்டுள்ளன. தனிப்பட்ட அறிவியல் ஆய்வு அமைப்புக்களுக்கு சீன அரசு நிதியுதவி வழங்குகிறது. தற்போது, சீனாவில் சுமார் 2 ஆயிரம் தனிப்பட்ட அறிவியல் ஆய்வு அமைப்புக்கள் உள்ளன. இவற்றில், சுமார் 500 அரசு நிலை அமைப்புக்களாக இருக்கின்றன. உயர் கல்வி நிலையங்களுடன் அல்லது தொழில் நிறுவனங்களுடன் சார்புடைய அறிவியல் ஆய்வு அமைப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக உள்ளது.
சீனாவின் அறிவியல் ஆய்வு அமைப்புக்களில், அடிப்படை, பயனீடு, சமூக பொது நலன் உட்பட மூன்று வகை அறிவியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனங்கள், சீன அறிவியல் கழகம் மற்றும் உயர் கல்வி நிலையங்களைச் சேர்ந்த ஆய்வகங்களாகும். பயனீட்டு அறிவியல் ஆய்வு அமைப்புக்கள், முன்பு, பெரும்பாலும் சீனாவின் பல்வேறு தொழில் நிறுவனங்களை சார்ந்திருந்தன. தற்போது, அவை, புதிய உயர் தொழில் நுட்ப நிறுவனங்களாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, சீன இரும்பு அல்லாத உலோக ஆய்வு நிறுவனம், சீன அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு அறிவியல் ஆய்வு நிறுவனம், சீன கட்டிட வடிவமைப்பு ஆய்வு நிறுவனம். சமூக பொது நல ஆய்வு நிறுவனங்கள், வேளாண்மை, வானியல் ஆய்வு உட்பட, அடிப்படைப் பணிகளின் மூலம், சமூகப் பயன் அளிக்கும் நிறுவனங்களாகும். எடுத்துக்காட்டாக, சீன வேளாண்மை அறிவியல் கழகம், சீன வன வளத் தொழில் அறிவியல் கழகம், சீன வானியல் அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றைக் கூறலாம்.
சீன அறிவியல் கழகம், மிகவும் புகழ் பெற்ற, மிக பெரிய அறிவியல் ஆய்வு அமைப்பாகும். 1949ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்கழகத்தின் தலைமையகம் பெய்ஜிங்கில் அமைந்துள்ளது. சீன அறிவியல் கழகத்தின் ஆய்வுத் துறைகளில், இயற்கை அறிவியல் மற்றும் புதிய உயர் தொழில் நுட்பம் அடங்கும். கணிதம், வேதியியல், உயிரியல், புவியியல், தொழில் நுட்ப அறிவியல் உள்ளிட்ட ஐந்து துறைகளில் ஆராய்ச்சி நடக்கிறது. சீனாவின் பல்வேறு இடங்களில் 11 கழக கிளைகளும், 84 ஆய்வுக்கூடங்களும் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் மொத்த ஆய்வாளர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரமாகும். சீன அறிவியல் கழகத்தில் மிக உயர் தரமான அறிவியல் ஆய்வுப் பணியாளர்கள் இருக்கின்றனர். இதன் ஆய்வுக்கூடங்களின் நிலையும் மிகவும் உயர்வானது. சில ஆய்வுக்கூடங்கள் உலக அளவில் புகழ் பெற்றவை.
1 2 3 4