• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம்

சீன-அந்நிய ஒத்துழைப்பு ஆராய்ச்சி

அறிவியல் நாட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. சீனா அறிவியல் தொழில் நுட்பத்தை சுயமாக வளர்க்கும் அதே வேளையில், சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப வளங்களைப் பயன்படுத்துகிறது. இதற்காக, அதிகப்படியான சர்வதேச அறிவியல் தொழில் நுட்பத் தொடர்பையும் ஒத்துழைப்பையும் சீனா மேற்கொண்டு, சர்வதேச நடவடிக்கைகளில் விரிவான முறையில் பங்கெடுத்து, வெளிநாடுகளில் கல்வி பயிலவும், ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், ஏராளமான அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்களை அனுப்பியுள்ளது. இதற்கிடையில், சீனாவின் அடிப்படை ஆராய்ச்சித் திட்டம், புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சித் திட்டம் ஆகியவை வெளிநாடுகளின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. அன்னிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும், அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்களும் சீனாவின் அறிவியல் ஆய்வு பணிகளில் பங்கெடுப்பதை சீனா வரவேற்று, வெளிநாடுகளில் கல்வி பயிலும் சீனர்கள், பல்வேறு வடிவங்களில் நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காக பங்காற்றுவதை ஊக்குவிக்கின்றது. தற்போது, சில அன்னிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களும் தனிநபர்களும் சீனாவின் அறிவியல் ஆய்வு பணிகளில் பங்கெடுத்துள்ளனர்.

இதற்கிடையில், அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள், பெரிய ரக சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப திட்டப்பணிகளில் பெருமளவில் பங்கெடுத்துள்ளனர். புகழ் பெற்ற மனித குல மரபணுக் குழு திட்டத்தில் சீன அறிவியலாளர்கள் பங்கெடுத்து, கடமையை இனிதே நிறைவேற்றியுள்ளனர்.

2003ஆம் ஆண்டில், கலிலியோ திட்டத்தில் சேர, சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. இத்திட்டத்தில் செயற்கைக் கோளின் தயாரிப்பு, செலுத்துதல், பயனீட்டுப் பொருட்களின் அகழ்வு, வரையறை வகுத்தல் உள்ளிட்ட முழுப் பணிகளில் சீனா பங்கெடுக்கும். தவிர, சர்வதேச வெப்ப அணு உலைத் திட்டம், சர்வதேச மனித ஈரல் புரதத் திட்டம் ஆகியவற்றில் சீனா பங்கெடுத்துள்ளது.

சீனா, தொடர்புடைய நாடுகளுடன் ஒத்துழைத்து, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, சீன-ஜெர்மன் தொலை தொடர்பு மென் பொருள் தொழில் நுட்ப ஆய்வகம், சீன-ஸ்பெயின் தானியங்கி போக்குவரத்து மையம், சீன-பிரிட்டிஷ் தானியங்கி போக்குவரத்து மையம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. தவிர, சீன-அமெரிக்க மேரிலேண்ட் அறிவியல் தொழில் நுட்ப மண்டலம், சீன-பிரிட்டிஷ் அறிவியல் தொழில் நுட்ப மண்டலம் முதலிய, வெளிநாடுகளில் நிறுவப்பட்ட அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040