• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நிர்வாக பிரதேசங்கள்]

மாநில நிர்வாக வாரியங்கள்

நடுவண் அரசின் நேரடி ஆட்சியின் கூழுள்ள 4 மாநகரங்கள் வருமாறு;

பெய்சிங்

பெய்சிங் சீன மக்கள் குடியரசின் தலைநகராகும். ஜிங் என்பது அதன் சுருக்கப் பெயர். அது வட சீன சமவெயின் வட மேற்கு கோடியில் அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் "ஜி" என அது அழைக்கப்பட்டது. கி.மு.770-கி.மு.221 போது யென் நாட்டின் தலைநகராக அது இருந்தது. லியௌ நாட்டின் துணைத் தலைநகராக இருந்தது. அதன் பெயர் யென்ஜிங். ஜின், யுவான், மின், சிங் வமிச ஆட்சிக் காலங்களிலும் சீனக் குடியரசின் துவக்கக் காலத்திலும் அது தலைநகராக இருந்து வந்தது. சொங்து, தாது, பெய்பின், பெய்ஜிங் ஆகிய பெயர்கள் அதற்கு உண்டு. 1928ல் அது நகராக அமைக்கப்படத் துவங்கியது. இப்போது அதில் 16 வட்டங்களும் இரண்டு மாவட்டங்களும் உள்ளன. அது வடுவண் அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநகராகும். அது 16 ஆயிரத்து 800 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடையது. 2002ம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை ஒரு கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ஆகும். பெய்ஜிங் சீனாவின் அரசியல் மையம், பண்பாடு அறிவியல் மற்றும் கல்வி மையமூம் போக்குவரத்து மையமும் ஆகும். மேலும் அது சீனாவிலும் உலகிலும் புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இயற்கை காட்சிப் பிரதேசமும் ஆகும். பெருங்சுவர் அரண்மனை அருங்காட்சிகம், தேவலோக ஆலயம், மின் கல்லறை, கோடைகால மாளிகை, சியான் சான் பூங்கா ஆகியவை இவற்றில் இடம் பெறுகின்றன.

ஷாங்காய்

ஹு என்பது ஷாங்காயின் சுருக்கப் பெயராகும். அது கிழக்குச் சீனாவின் கடலோரத்தின் நடுப் பகுதியிலும் யாங்சி ஆற்றின் முகத்துவாரத்திலும் அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் அது ஒரு கடலோர மீன்பிடி கிராமமாக இருந்தது. வசந்தகாலம் மற்றும் இலையுதிர் கால வமிசக் காலத்தில் அது ஊ நாட்டின் உரிமைப் பிரதேசமாகத் திகழ்ந்தது. போர்க் காலத்தில் (கி.மு.475-221)ச்சூ நாட்டின் அதிகாரி சன் சன் ஜுன்னின் உதனியுரிமை பண்ணை இடமாகத் திகழ்ந்தது. சொங் வமிசக் காலத்தில் அது பட்டணமாக மாறி ஷாங்காய் என அழைக்கத் துவங்கியது. 1927ல் அது நகரமாயிற்று. தற்போது அது சீனவாவின் நடுவண் அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள 4 மாநகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 18 வட்டங்களும் ஒரு மாவட்டமும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. அதன் நிலப் பரப்பு 5800 சதுர கிலோமீட்டர். 2002ம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை ஒரு கோடியே 33 லட்சத்து 47 ஆயிரம் ஆகும். சீனாவின் முதலாவது பெரிய மாநகராகவும் உலகின் பெரிய மாநகரங்களில் ஒன்றாகவும் ஷாங்காய் விளங்குகின்றது. சீனாவின் மாபெரும் தொழில் துறை நகராகவும் வணிக மையமாகவும் நிதி நாணயத்தின் மையமாகவும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் தளமாகவும் அது திகழ்கின்றது.

தியென் சிங்

சின் என்பது தியென்சினின் சுர்ரமாகும். அது வட சீன சமவெளியின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஹாய் ஆற்றின் 5 பெரிய கிளைகள் இங்கு சங்கமித்து பொஹாய் கடலில் கலக்கின்றன. சின் மற்றும் யுவான் வமிசக் காலத்தில் ச்சு கு என அது அழைக்கப்பட்டது. நீர் போக்குவரத்துக்கான முக்கிய இடமாக இருந்தது. பின் ஹாய் சின் பட்டினமாக அது மாறியது. மிங் வமிசக் காலத்தின் துவக்கத்தில் மன்னரின் சின் வழியாக கடப்பது என்ற பொருளில் தியென்சின் என மாற்றப்பட்டது. இங்குப் படைகள் நிறுத்தப்படும் இடங்கள் அமைக்கப்பட்டன. சின் வமிசக் காலத்தில் தியென் சின் புஃ யென் என்று அழைக்கப்பட்டது. 1928ல் நகராக அது உருவாயிற்று. தற்போது 15 வட்டங்களும் 3 மாவட்டங்களும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. நடுவண் அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநகரமான அது 11 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்படையது. 2002ம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை 91 லட்சத்து 90 ஆயிரத்து 500 ஆகும். வட சீனாவின் மிகப் பெரிய தொழிற்துறை நகராக இது திகழ்கின்றது. எண்ணெய் வாயு கடல் உப்பு முதலிய செழிப்பான வளங்கள் அதற்கு உண்டு. குறிப்பிட்ட தொழிற்துறை தொழில் நுட்ப அடிப்படையும் அதற்கு உண்டு. வட சீனாவின் முக்கிய வணிக மையமாகவும் நுழைவாயில் நகராகவும் அது விளங்குகின்றது. நின்யுவான், தியென்ஹோ அரண்மனை, தாகுகோ பீங்கி மேடை ஜி மாவட்டத்தின் து லெ ஆலயம் குவான்யாகுவான் பழம் பெரும் சுவர் பெய்ஜிங்கிற்கு கிழக்கில் முதலாவது பெரிய மலை என அழஐக்கப்படும் பான்சான் இயற்கை காட்சித் தலம் முதலியவை தியென் சின் மாநகரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இயற்கை காட்சிப் பிரதேசங்களாகும்.

சொங்சின்

யூ என்பது சுங்சின் மாநகரின் சுருக்கப் பெயராகும். அது சீனாவின் தென்மேற்கு பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலும் யாங்சி ஆற்றின் மேற்பகுதியிலும் அமைந்துள்ளது. வசந்தகால மற்றும் இலையுதிர்கால போர்க் காலத்தின் போது (கி.மு.770-கி.மு.476)பா நாட்டின் உரிமைப் பிரதேசமாக இருந்தது. சியூ தாங் வமிசக் காலத்தில் யூ சோவைத் அது சேர்ந்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போரின் போது கோமிங்தான் அரசின் துணை தலைநகராக இருந்தது. 1997ல் முன்னாள் சிச்சுவான் மாநிலத்தின் சொங்சின், வான்சியென், புஃலின் ஆகிய மூன்று சிறிய நகரங்கள், சின்சியான் நிர்வாகப் பிரதேசம் ஆகியவற்றை இணஐத்துக் கொண்டு வடுவண் அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள சொங்சின் மாநகராகியுள்ளது.

15 வட்டங்கள், 4 மாவட்ட நிலை நகரங்கள், 17 மாவட்டங்கள், 4 தன்னாட்சி மாவட்டங்கள் ஆகியவை அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. முழு மாநகரத்தின் நிலப்பரப்பு 82 ஆயிரத்து 300 சதுரக் கிலோமீட்டராகும். 2002ம் ஆண்டு இறுதி வரை முழு மாநகரத்தின் மக்கள் தொகை மூன்று கோடியே 10 லட்சத்து 70 ஆயிரமாகும். சொஹ்சின் மாநகர் பன்நோக்கத் தொழிற்துறை மாநகராகும். யாங்சி மூ மலை இடுக்கு, பிப்பா மலை, சின்யூன் மலை உள்ளிட்ட இயற்கை காட்சித் தலங்கள் இங்கு உண்டு.


1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040