• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தொழில் கட்டுமானம்]

தொழில் கட்டுமானம்

தொழில் கட்டுமானமானது, தொழில் வாரியங்களுக்கிடையில் உற்பத்திக் காரணிகள் வகிக்கும் விகிதமாகும். இவற்றுக்கிடையில் ஒன்றை ஒன்று சார்ந்திருந்து, ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தும் தொடர்பும் ஆகும். வேளாண் துறை, தொழில் துறை, சேவைத் துறை ஆகிய 3 தொழில்களுக்கிடையிலான விகிதமும் பல்வேறு வாரியங்களுக்கிடையிலான விகிதமும் ஆகும்.

சீனாவின் தொழில் கட்டுமான வளர்ச்சியில் 3 கட்டம் காணப்படுகின்றது. 1950ஆம் ஆண்டுகள் முதல், 70ஆம் ஆண்டுகளின் இறுதி வரை, முதற்கட்டமாகும். இக்காலத்தில், அரை காலனிசப் பொருளாதாரத்தின் தனிச்சிறப்பியல்பை சீனா விரைவாக மாற்றி, தொழில் துறைமயமாக்கத்த்துக்குப் பூர்வாங்க ரீதியில் அடிப்படை இட்டுள்ளது. 1979ஆம் ஆண்டு முதல் 90ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரை 2வது கட்டமாகும். சீர்த்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை சீனா நடைமுறைப்படுத்தி, தொழில் கட்டுமானத்தை இடைவிடாமல் சரிப்படுத்தி வருகின்றது. தொழில் துறை மயமாக்கத்தின் இடைக்காலக்கட்டத்தில் அப்போது சீனா நுழைந்துள்ளது. 1990ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், சோஷலிச சந்தை பொருளாதார அமைப்புமுறையை நிறுவும் இலக்கை சீனா முன்வைத்துள்ளது. அப்போது முதல் 2020ஆம் ஆண்டு வரை, மூன்றாவது கட்டமாகும். இக்காலகட்டத்தில் தொழில் துறைமயமாகத்தை சீனா நிறைவேற்றும் அதேவேளையில், தகவல்மயமாக்கத்தை பூர்வாங்க ரீதியில் நனவாக்கவுள்ளது.

கடந்த 55 ஆண்டுகளில், சீனாவில் 3 தொழில்கள் வகிக்கும் விகிதத் தொடர்பில் மாபெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. 1950ஆம் ஆண்டுகளின் துவக்கம் முதல், 2002ஆம் ஆண்டு வரை, வேளாண் துறை வகிக்கும் விகிதம் 45.4 விழுக்காட்டிலிருந்து 14.5 விழுக்காடாக குறைந்தது. தொழில் துறை வகிக்கும் விகிதம் 34.4 விழுக்காட்டிலிருந்து 51.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சேவைத் துறை வகிக்கும் விகிதம் 20.2 விழுக்காட்டிலிருந்து 33.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040