• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தொழில் கட்டுமானம்]

தொழில் துறை

1950 முதல், சீனத் தொழில் துறை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. 1949க்கு பின், பன்முக மீட்பு மற்றும் வளர்ச்சி காலகட்டத்தில் அது நுழைந்தது. 1978ஆம் ஆண்டு சீர்திருத்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன், ஒப்பீட்டளவில் முழுமையான தொழில் துறை பொருளாதார அமைப்பு முறை பூர்வாங்க ரீதியில் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய பெட்ரோலியத் துறை, வேதியியல் துறை, மிண்ணணுத் துறை ஆகியவை விரைவாக அதிகரித்து வருகின்றன. உயரிய அறிவியல் தொழில் நுட்பத் துறையான அணுத் தொழில் துறையிலும் விண்வெளித் தொழில் துறையிலும் முக்கிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. 1970 ஆண்டுகளின் இறுதி முதல், சீனத் தொழில் துறையின் வளர்ச்சி வேகம் மேலும் அதிகரித்து வருகின்றது. 1979ஆம் ஆண்டு முதல், 2003ஆம் ஆண்டு வரை, தொழில் துறையின் அதகரிப்பு மதிப்பு ஆண்டுக்கு 10 விழுக்காட்டுக்கும் அதிகமாகும்.

50 ஆண்டுக்கால வளர்ச்சி மூலம், சீனாவின் முக்கிய தொழில் துறை உற்பத்திப் பொருட்களின் உற்பத்தி பல நூறு மடங்காக அதிகரித்து வருகின்றது. பல்வகைப் பொருட்கள் உலகின் பல்வேறு இடங்களில் விற்பனையாகின்றன. 1996ஆம் ஆண்டு முதல், இரும்புருக்கு, நிலக்கரி, சிமெண்ட், வேளாண் வேதியல் உரம், தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றின் உற்பத்தி அளவு உலகில் முதலிடம் வகிக்கின்றன.

2003ஆம் ஆண்டில், சீனத் தொழில் துறை உற்பத்தியின் அதிகரிப்பு மதிப்பு 5 இலட்சத்து 36 ஆயிரத்து 120 கோடி யுவானாகும். 2002ஆம் ஆண்டை விட 12.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. தற்போது, விமானம், கப்பல், உந்துவண்டி முதலியவற்றை சீனா உற்பத்தி செய்யலாம். இது மட்டுமல்ல, செயற்கை கோள், நவீனமயமாக்கத் தொழில் துறை வசதி முதலியவற்றையும் உற்பத்தி செய்ய முடியும். குறிப்பிடத்தக்க தொழில் நுட்பத் தரமுடைய, பல்வகைப்பட்ட சுதந்திரமான தொழில் துறைத் தொகுதி சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்க்காலத்தில், தகவல் மயமாக்கத்தினால் தொழில் மயமாக்கத்தை விரைவுப்படுத்தும் நெடுநோக்குத் திட்டத்தை சீனா மேலும் நடைமுறைப்படுத்தி, பொருளாதாரத்தை முன்னேற்றுவிக்கும் தொழில் துறையின் பங்கினை விரைவுப்படுத்தவுள்ளது.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040