• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தொழில் கட்டுமானம்]

சேவைத் துறை

1970 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் சேவைத் துறையில் பெரும் வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

ஒன்று, அதன் அளவு இடைவிடைமல் அதிகரித்து வருகின்றது. புள்ளிவிவரங்களின் படி, 1978 முதல் 2002 வரை, இத்துறையின் அதிகரிப்பு மதிப்பு 8605 கோடி யுவான் முதல், 3 இலட்சத்து 45 ஆயிரத்து 330 கோடி யுவானாக அதாவது 39 மடங்காக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 10 விழுக்காடு என அதிகரித்து வருகின்றது. அதே காலத்திலான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு வேகத்தைத் தாண்டியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது வகிக்கும் விகிதம், 1979ஆம் ஆண்டிலான 21.4 விழுக்காட்டிலிருந்து 2002ஆம் ஆண்டிலான 33.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2003ஆம் ஆண்டில், சார்ஸ் நோய், இயற்கைச் சீற்றம் ஆகியவற்றின் பாதிக்கப்பட்டாலும், சீனாவின் சேவைத் துறை வேகமான வளர்ச்சி கண்டுள்ளது.

இரண்டு, சேவைத் துறை சமூகத்துக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் முக்கிய துறையாக மாறியுள்ளது. இத்துறையில் பணி புரியும் மக்கள் தொகை 1978ஆம் ஆண்டிலான 4 கோடியே 89 இலட்சமாகும். 2002ஆம் ஆண்டு அது 21 கோடியாக அதிகரித்துள்ளது.

உணவு விடுதி, சுற்றுலா, விற்பனை, நாணயம், காப்பீடு, தகவல், போக்குவரத்து, விரம்பரம், சட்டம், கணக்கீடு முதலிய பல துறைகளுடன் சேவைத் துறை தொடர்புடையது. சீனாவின் வளர்ச்சித் திட்டத்துக்கிணங்க, 2020ஆம் ஆண்டுக்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இத்துறையின் அதிகரிப்பு மதிப்பு விகிக்கும் வகிதம் தற்போதைய 33 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக அதிகரிக்கும்.


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040