• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தொழில் கட்டுமானம்]

வேளாண் துறை

சீனாவில், மக்கள் தொகையில் விவசாயிகள் வகிக்கும் விகிதம் அதிகம். சீன பொருளாதாரத்தில் வேளாண் துறை வகிக்கும் இடம் மிக முக்கியமானது.

96 இலட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய சீனாவில் 12.7 இலட்சம் சதுர கிலோமீட்டர் வளம் நிலம் மட்டும் இருக்கின்றது. உலகின் மொத்த நிலப்பரப்பில் இது 7 விழுக்காடு வகிக்கின்றது. பயிர்த் தொழில் சீனாவின் மிக முக்கியமான வேளாண் தொழிலாகும். நெல், கோதுமை, சோளம், அவரை ஆகியவை முக்கிய தானிய உற்பத்திப் பொருட்களாகும். பருத்தி, தேயிலை ஆகியவை முக்கிய பொருளாதார உற்பத்திப் பொருட்களாகும்.

1978ஆம் ஆண்டு கிராமப்புறத்தில் சீர்த்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனாவின் வேளாண் துறையில் வேகமான வளர்ச்சி காணப்பட்டுள்ளது. கடந்த 20க்கும் அதிகமான ஆண்டுகளில், கூட்டு உடைமைமுறையின் கட்டுக்கோப்புக்குள் சந்தையின் வழிகாட்டுடன், சீன கிராமப்புறச் சீர்திருத்தம் பாரம்பரிய அமைப்புமுறையின் கட்டுப்பாட்டை முறியடித்து, சந்தைப் பொருளாதார நிபந்தனை கீழுள்ள கூட்டாண்மைப் பொருளாதாரத்தின் புதிய முறைமையை கண்டறிந்துள்ளது. சீர்திருத்தம் விவசாயிகளுக்கு நன்மை தந்துள்ளது. வேளாண் உற்பத்தியாற்றலை வளர்ச்சியுறச் செய்து வருகின்றது. வேளாண் துறை குறிப்பாக தானிய உற்பத்தியின் விரைவான அதிகரிப்பையும் வேளாண் துறை கட்டுமானத்தின் தொடர்ச்சியான மேம்பாட்டையும் விரைவுப்படுத்தியுள்ளது. சீனாவின் வேளாண் துறை மாபெரும் சாதனை பெற்றுள்ளது. தற்போது, சீனாவின் தானியம், பருத்தி, இறைச்சி, முட்டை, நீர் வள உற்பத்திப் பொருள், காய்கறி முதலியவற்றின் உற்பத்தி அளவு உலகில் முதலிடம் வகிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில், கிராமங்களும் நகரங்களும் கூட்டாகவும் ஒழுங்காகவும் வளர்வதைப் படிப்படியாக நனவாக்கும் வகையில், வேளாண் துறையின் வளர்ச்சியை முக்கிய பணியாக அரசு மேற்கொண்டு வருகின்றது. இத்துறையிலான முதலீட்டை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி வருகின்றது.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040