• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நாணய அமைப்பு]
வங்கியும் கண்காணிப்பும்  

மத்திய வங்கியின் கண்காணிப்பிலான நிதி அமைப்புமுறை சீனாவில் அடிப்படையில் உருவாக்கியுள்ளது.

மத்திய வங்கியின் பொறுப்பை சீன மக்கள் வங்கி ஏற்று, முழு நாட்டின் நிதித் துறையை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்தி, கண்காணிக்கின்றது. சீன தொழில் மற்றும் வணிக வங்கி, சீன வங்கி, சீன வேளாண் வங்கி, சீன கட்டுமான வங்கி ஆகிய 4 வங்கிகள் தேசிய வணிக வங்கிகளாகும். சீன வேளாண் துறை வளர்ச்சி வங்கி, தேசிய வளர்ச்சி வங்கி, சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி ஆகிய மூன்று வங்கிகள் கொள்கை வங்கிகளாகத் திகழ்கின்றன. 1995ஆம் ஆண்டு, வணிக வங்கி பற்றிய சட்டத்தை சீனா வெளியிட்டது. வணிக வங்கி அமைப்புமுறை மற்றும் நிறுவனத்தை உருவாக்குவதற்கு இது நிபந்தனை வகுத்து, தேசிய சிறப்பு வங்கிகளிலிருந்து அரசு சார் வணிக வங்கிகளாக மாறுவதற்கும் சட்டவிதிகளை வழங்கியுள்ளது. 1996ஆம் ஆண்டில், நிதித் துறையின் அமைப்புமுறை படிப்படியாக சீராகி வருகின்றது. சீர்திருத்தத்தின் படி, நாணயத்தை இயக்கும் புதிய நிதி நிறுவனமாக அரசு சார் வணிக வங்கி மாறியுள்ளது. 120க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர வணிக வங்கிகள் புதிதாக நிறுவப்பட்டன அல்லது சரிப்படுத்தப்பட்டுள்ளன. பங்கு பத்திர மற்றும் காப்பீட்டு நிதி நிறுவனங்களை மேலும் சீராக்கி வளர்த்து வருகின்றது.

சீன வங்கித் துறை கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம் சீன வங்கியின் கண்காணிப்பு நிறுவனமாகும். 2003ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ந் நாள், இது அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றது. வங்கித் துறையில் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து நிர்வகிக்கும் தொடர்புடைய விதிகளை வகுத்து, சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளின் மீது சட்டப்படி தண்டனை விதிப்பது என்பது இதன் பொறுப்பாகும்.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040