• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நாணய அமைப்பு]

ரென் மின் பியும் அந்நிய செலாவணி நிர்வாகமும்  

ரென் மின் பி என்பது சீனாவின் நாணயமாகும். சீன மக்கள் வங்கியால் வெளியிடப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது. சீன மக்கள் வங்கி இதன் மாற்று விகிதத்தை வகுத்து, தேசிய அந்நிய செலாவணி நிர்வாக அலுவலகம் இவ்விகிதத்தை வெளிப்படுத்துகின்றது. அரசு செலாவணி தொழிலை நடத்துகின்றது. தேசிய அந்நிய செலாவணி நிர்வாக அலுவலகம் இதனை நிர்வகிக்கும் பொறுப்பு ஏற்கின்றது.

1994ஆம் ஆண்டு, அந்நிய செலாவணி அமைப்புமுறையை சீனா திருத்தியது. வங்கிகளுக்கிடையில் ஒன்றிணைந்த அந்நிய செலாவணி சந்தையை உருவாக்கியது. அதன் அடிப்படையில், 1996 டிசம்பர் முதல் நாளன்று, சர்வதேச நாணய நிதி உடன்படிக்கையின் 8வது விதியை சீனா ஏற்றுக்கொண்டது. அதேவேளையில், தென் கிழக்காசிய நாடுகள் அமைப்பு, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றுக்கிடையிலான இரு தரப்பு நாணய பரிமாற்றம் உள்ளிட்ட நிதி ஒத்துழைப்பை சீனா முன்னேற்றுவித்துள்ளது. குறிப்பாக, ஆசிய நாணய நெருக்கடியின் போது, ரென் மின் பி மதிப்பை நிதானப்படுத்துவதில் சீனா ஊன்றி நின்று, நெருக்கடியில் சிக்கிய தொடர்புடைய நாடுகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. ஆசிய நாணய சந்தையின் நிதானத்தைப் பேணிக்காக்கும் முக்கிய நாடாக சீனா மாறியுள்ளது.

2003ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 40 ஆயிரத்து 330 கோடி அமெரிக்க டாலரை எட்டி, 2002 அதே காலத்தை விட, 11 ஆயிரத்து 680 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது. ரென் மின் பியின் மாற்று விகிதம் நிதானத்தை நிலைநிறுத்தியுள்ளது.


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040