• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நாணய அமைப்பு]

பங்கு பத்திரமும் இதன் கண்காணிப்பும்

1990, 1991இல், ஷாங்காயிலும் செசெனிலும் பங்கு பத்திர நிலையங்கள் கட்டியமைக்கப்பட்டதன. இதற்குப் பிந்திய அடுத்த 10 ஆண்டுக் காலத்தில், சீனாவின் பங்கு பத்திர சந்தையில் பெரும் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இன்று 4 இலட்சம் கோடி யுவான், சுமார் 1200 நிறுவனங்கள், 7 கோடி முதலீட்டாளர்கள் ஆகியவற்றைக் கொண்டதாக இது மாறியுள்ளது.

1998ஆம் ஆண்டில், பங்கு பத்திர கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம் நிறுவப்பட்டது. முழு நாட்டின் பங்குப்பத்திரச் சந்தையின் முக்கிய நிர்வாக அமைப்பான இது, ஒன்றிணைப்பான பங்குப்பத்திரக் கண்காணிப்பு மற்றும் நிர்வாக அமைப்புமுறையைக் கட்டியமைத்து, விதிகளின்படி, பங்குப்பத்திர கண்காணிப்பு மற்றும் நிர்வாக நிறுவனங்களை நேரடியாக நிர்வகிக்கின்றது. பொது மக்களைப் பொருத்த வரை, பங்குப்பத்திர சந்தை மிக முக்கிய முதலீட்டு வழிமுறையாக மாறியுள்ளது. ஷாங்காய் மற்றும் சென்சென் பங்குப்பத்திர நிலைமை முழு பங்குப்பத்திர சந்தையின் முதுகெலும்பாக மாறியுள்ளது. நாடு தழுவிய பங்குப்பத்திர வர்த்தக இணைய தொகுதியில், மின்னணு வெளியீடு மற்றும் வர்த்தகம் நனவாகியுள்ளது. இதன் முக்கிய தொழில்நுட்ப வழிமுறைகள் உலகின் முன்னேறிய நிலைமையில் இருக்கின்றன. 2003ஆம் ஆண்டின் இறுதியில், இச்சந்தையில் கலந்து கொள்ளும் கூட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 1287ஆக அதிகரித்துள்ளது. மொத்த சந்தை மதிப்பு 4 இலட்சத்து 25 ஆயிரத்து 780 கோடி யுவானாகும். 2002ஐ விட 11 விழுக்காடு அதிகரித்துள்ளது.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040