காப்புறுதியும் கண்காணிப்பும்
சீனாவின் காப்புறுதி துறை 1980ஆம் ஆண்டு மீண்டும் துவங்கியது. 1981இல், அரசின் வாரியமான சீன மக்கள் காப்புறுதி கூட்டு நிறுவனம் சிறப்புக் கூட்டு நிறுவனமாக மாறியது. பொதுக் கூட்டு நிறுவனம் முதல், மாநிலம், தன்னாட்சி பிரதேசம், மாநகர மற்றும் மாவட்டத்திலான கிளைகள் வரையான கட்டமைப்பு உருவானது. 1988இல், பின் ஆன் காப்புறுதி கூட்டு நிறுவனமும், பசிபிக் காப்புறுதி கூட்டு நிறுவனமும் நிறுவப்பட்டன. 1996இல், சீன மக்கள் காப்புறுதி கூட்டு நிறுவனம் இதன் நிர்வாக அமைப்புமுறையையும், இயங்கும் வடிவத்தையும் மாற்றி, நவீனமயமாக்கத் தொழில் நிறுவன அமைப்புமுறையைக் கட்டியமைத்து, சர்வதேச சந்தையில் காலடி எடுத்துவைத்துள்ளது. 1985இல் வெளியிட்ட காப்புறுதி சட்டமும், 1988இல் நிறுவப்பட்ட சீன காப்புறுதிக் கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையமும், காப்புறுதிச் செயல்பாட்டுக்கான சட்டவிதியை வழங்கியுள்ளன.
தற்போது, சீனாவில் 70 ஆயிரத்துக்கு அதிகமான காப்புறுதிக் கூட்டு நிறுவனங்கள், காப்புறுதி இடைநிலை வாரியங்கள் முதலியவை இருக்கின்றன. காப்புறுதியின் வகையும் அதிகம். ஆயுள், உடல் நலம், எதிர்பாராத விபத்து, சொத்து முதலிய துறைகளுடன் அவை தொடர்புடையன. சுமார் 30 வெளிநாட்டு காப்புறுதி நிர்வாக வாரியங்கள் அனுமதி பெற்று சீனாவில் செயல்படுகின்றன. தவிர, 100க்கும் அதிகமான வெளிநாட்டு கூட்டு நிறுவனங்கள் சீனாவில் 200க்கும் அதிகமான பிரதிநிதி அலுவலகங்களை நிறுவி, சீனாவின் காப்புறுதிச் சந்தையில் நுழைய காத்திருக்கின்றன. 2003இல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கூட்டு நிறுவனங்களின் காப்புறுதி கட்டணத் தொகை 38 ஆயிரத்து 800 கோடி யுவனாகும். இது 2002ஐ விட 27.1 விழுக்காடு அதிகமாகும்.
1 2 3 4