மூ மலை இடுக்குத் திட்டப்பணி
யாங்சி ஆற்றின் நீர் மூலவளம் அதிகமானது. யாங்சி ஆற்றின் மூ மலை இடுக்கு நீர் சேமிப்புக்கான முக்கிய திட்டப்பணியானது, யாங்சி ஆற்றை ஒட்டுமொத்த முறையில் கட்டுப்படுத்தி திறந்து வைக்கும் மிக முக்கிய திட்டப்பணியாகும். யாங்சி ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஹு பெய் மாநிலத்து யீ சான் நகரின் சான் துபின் எனும் இடத்தில் இது மேற்கொள்ளப்படுகின்றது. ஆண்டுதோறும் சராசரியாக 50 ஆயிரம் கோடி கனமீட்டர் நீர் இவ் வழியாக ஓடுகின்றது.

சிறப்பாக வளர்ச்சியுறச் செய்து, திட்டப்பணியை ஒரே மூச்சில் நிறைவேற்றும் வகையில், கட்டங்கட்டமாக நீரைச் சேமித்து, தொடர்ச்சியாக மக்களைக் குடியேற்றச் செய்வதன் திட்டத்தை யாங்சி ஆற்று மூ மலை இடுக்குத் திட்டப்பணி நடைமுறைப்படுத்துப்படுகின்றது. அணையின் மொத்த நீளம் 3035 மீட்டராகும். 175 மீட்டர் உயரத்துக்கு, 3930 கோடி கனமீட்டர் நீர் சேமிக்கப்படலாம்.
இத் திட்டப்பணி நிறைவேறிய பின், வெள்ளத் தடுப்பு, மின்னாக்கி, கப்பல் போக்குவரத்து, நீர் வாழ்வன வளர்ப்பு, சுற்றுலா, உயிரின வாழ்க்கைப் பாதுகாப்பு முதலிய துறைகள் பயன் பெறலாம்.
1 2 3 4