• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[முக்கிய திட்டப்பணிகள்]

மேற்கு பகுதியிலிருந்து கிழக்கு பகுதிக்கு மின்சாரத்தை அனுப்பும் திட்டப்பணி

மேற்கு பகுதியிலிருந்து மின்சாரத்தை கிழக்கு பகுதிக்கு அனுப்பும் திட்டப்பணியானது, சீனாவின் மேற்கு பகுதியில் அதிகமாக உள்ள மின்சாரத்தை பொருளாதார வளர்ச்சி அடைந்த கிழக்கு பகுதிக்கும் அனுப்பும் திட்டப்பணியாகும்.

வடக்கு, நடு, தெற்கு ஆகிய 3 வழிகள் இதில் இடம்பெறுகின்றன.

வடக்கு வழி மூலம், வடமேற்கு பகுதியிலுள்ள நீர் மின்சாரம், பெய்ஜிங், தியே சின், ஹெர் பெய், சான் துங் ஆகிய பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகின்றது.

நடு வழி மூலம், யாங்சி ஆற்றின் நீர் மீன்சாரம் சீனாவின் நடுப் பகுதிக்கும் கிழக்கு பகுதிக்கும் புஃ சியேன் மாநிலத்துக்கும் அனுப்பப்படுகின்றது. இது இத்திட்டப்பணியின் மிக பெரிய பகுதியாகும்.

தெற்கு வழி மூலம், குய் சோ மாநிலத்தின் ஊ சியாங் ஆறு, யுன் நான் மாநிலத்தின் லன் சான் சியாங் ஆறு, ஹுங் சுய் ஆறு ஆகியவற்றின் நீர் மின்சாரம், குவான் துங் மாநிலத்துக்கு அனுப்பப்படுகின்றது.

மேற்கு பகுதியிலிருந்து மின்சார்ததை கிழக்கு பகுதிக்கு அனுப்பும் திட்டப்பணி மேற்கு பகுதியை வளர்ச்சியுறச்செய்யும் சீன அரசின் நெடுநோக்கு திட்டத்தின் முக்கிய பகுதியாகும். மேற்கு பகுதியில் அதிகமாக உள்ள மூலவளத்தையும் கிழக்கு பகுதியின் மாபெரும் சந்தையையும் ஒன்றிணைத்து, சீன தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சியை நிச்சயம் மேம்படுத்த முடியும்.


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040