• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[முக்கிய திட்டப்பணிகள்]

தெற்கிலான நீரை வடக்கிற்கு அனுப்புவது

சீனாவின் தெற்குப் பகுதியில் நீர் அதிகம். வடக்கில் குறைவு. தெற்கிலான நீர் மூலவளத்தை வடக்கிற்கு அனுப்பும் வகையில், 50 ஆண்டு களவாய்வு மற்றும் பரிசோதனைக்குப் பின், சீனாவின் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர் இத்திட்டப்பணியை மேற்கொள்ளத் துவங்கினர்.

இத்திட்டப்பணியில் கிழக்கு, நடு, மேற்கு ஆகிய 3 நெறிகள் இடம்பெறுகின்றன. இம்மூன்ற நெறிகளும் யாங்சி, மஞ்சள், குவாய் ஹ, ஹாய் ஹ ஆகிய 4 பெரிய ஆறுகளை இணைத்து திட்டப்பணியின் முக்கிய பகுதியை உருவாக்கியுள்ளன.

கிழக்கு நெறி திட்டப்பணி

யாங்சி ஆற்றின் கடைசி பகுதியில் அமைந்துள்ள யான் சௌவிலிருந்து ஆற்றின் நீரை எடுத்து, சின் ஹான் செயற்கை ஆறு உட்பட ஆறுகளின் மூலம், வடக்கிற்கு அனுப்பி, ஹுன் ச, லு மா, நான் சி, துன் பின், ஆகிய ஏரிகளையும் இணைக்கின்றது. நீர் 2 வழியாக அனுப்பப்படுகின்றது. ஒரு வழி, வடக்கு நோக்கி, மஞ்சள் ஆற்றின் வழியாகச் செல்கின்றது. மற்றொன்று, கிழக்கு நோக்கி, சியாவ் துன் பிரதேசம் வழியாக சான்துன் மாநிலத்தின் யன் தாய், வெய் காய் ஆகியவற்றுக்குச் செல்கின்றது.

தெற்கிலான நீரை வடக்கிற்கு

அனுப்பும் திட்டப்பணி

தெற்கிலான நீரை வடக்கிற்கு அனுப்புவது

நடு நெறி

தான் சியான் கோ நீர் தேக்கத்தின் நீரை எடுத்து, பெய்ஜிங் கு சௌ இருப்புபாதை வழியாக, வடக்கு நோக்கி அனுப்புகின்றது. பெய்ஜிங் தியே ச்சின் ஆகிய மாநகரங்களில் ஆற்று நீர் வருகின்றது.

மேற்கு நெறி

யாங்சி ஆற்றில் முதல் பகுதியில் அமைந்துள்ள துன் தியேன், இதன் கிளை யான் லுன், தா து ஆகிய ஆற்றுப் பிரதேசத்தில் அணைக்கட்டைக் கட்டியமைத்து, யாங்சி ஆற்றின் நீரை மஞ்சள் ஆற்றின் முதல் பகுதிக்கு அனுப்புகின்றது. திட்டத்தின் படி, 2050 வரை, இம்மூன்று நெறிகளின் மூலம் அனுப்பப்படும் நீரின் அளவு 4480 கோடி கனமீட்டரை எட்டக் கூடும். இவற்றில், கிழக்கு நெறி 1480 கோடி கனமீட்டர், இடை நெறி 1300 கோடி கனமீட்டர், மேற்கு நெறி 1700 கோடி கனமீட்டர்.

இத்திட்டப்பணி கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படுகின்றது. தற்போது, கிழக்கு மற்றும் இடை நெறியில் 4 நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040