• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[முக்கிய திட்டப்பணிகள்]

மேற்கிலுள்ள இயற்கை வாயுவை கிழக்குப் பகுதிக்கு அனுப்பும் திட்டப்பணி  

சிங்ஜியாங், சிங்காய், சுவான்யு, ஏர்தோஸ் ஆகிய 4 பிரதேசங்களிலிருந்து யான்சி ஆற்று முகத்துவாரத்துக்கு இயற்கை வாயுவை அனுப்பும் திட்டப்பணி இதுவாகும்.

சீனாவின் தலிமு, சுங்கர், துஹா, சைதாமு, ஏர்தோஸ், சிச்சுவான் ஆகிய 6 இயற்கை வாயு நிறைந்த வடிநிலங்களில் சுமார் 22 லட்சத்து 40 ஆயிரம் கோடி கனமீட்டர் இயற்கை வாயு இருக்கின்றது. முழு நாட்டின் மொத்த இயற்கை வாயு மூலவளத்தில் இது 58.9 விழுக்காடு வகிக்கின்றது. இயற்கை வாயுவின் மூலவள நிலைமை, களவாய்வு ஆகியவற்றுக்கிணங்க, மேற்கிலுள்ள இயற்கை வாயுவை கிழக்குப் பகுதிக்கு அனுப்பும் திட்டப்பணியை மேற்கொண்டு, இயற்கை வாயு குழாயைக் கட்டியமைப்பதை விரைவுப்படுத்துவதென அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சான்சி பெய்ஜிங் குழாய் தவிர, தலிமு - ஷாங்காய், சின்காய் செபை – சினின் – கான்சு லான்சௌ, சுச்சின் சுன் சியேன் – ஹுபெய் வூகான் ஆகிய மூன்று நெறிகளைக் கட்டியமைத்து, மூலவளத்தின் மேம்பாட்டை பொருளாதார மேம்பாடு உடையதாக கூடிய விரைவில் மாற்றி, இயற்கை வாயு மீதான கிழக்குப் பகுதியின் தேவையை நிறைவேற்றுவதானது இத்திட்டப்பணியின் நோக்கமாகும். திட்டத்தில் வகுக்கப்பட்ட ரஷிய மேற்கு சிபுலியாவிலிருந்து இயற்கை வாயுவை இறக்குமதி செய்யும் குழாயும் இத்திட்டப்பணியின் முக்கிய பகுதியும் இணைக்கப்படும். தவிர, ரஷிய கிழக்கு சிபுலியாவிலிருந்து இயற்கை வாயுவை இறக்குமதி செய்யும் குழாயின் கட்டுமானம் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இவ்வை இரண்டும் இத்திட்டப்பணியில் இடம்பெறுகின்றன.

சின்ச்சியான் தலிமு – ஷாங்காய் இயற்கை வாயு குழாயின் மொத்த நீளம் 4200 கிலோமீட்டராகும். குழாயின் விட்டம் 1.118 மீட்டராகும். சின்ச்சியான், கான்சு, நின்சியா, சான்சி, சன்சி, ஹெர்நான், ஆகுய், ச்சியான்சு, ஷாங்காய் ஆகிய 9 மாநிலங்கள் வழியாக ஆண்டுதோறும் 1200 கனமீட்டர் இயற்கை வாயுவை அனுப்பலாம். இதன் மொத்த முதலீட்டுத் தொகை 12 ஆயிரத்து கோடி யுவானாகும்.

தற்போது, இத்திட்டப்பணியின் கிழக்குப் பகுதி நிறைவேறியுள்ளது. 48 விழுக்காட்டு முதலீட்டுத் தொகையும் நிறைவேறியுள்ளது. கிழக்குப் பகுதி மக்கள் மேற்கிலிருந்து வந்த இயற்கை வாயுவைப் பயன்படுத்தத் துவங்கினர்.

 

(இத்திட்டப்பணியின் நெறி)

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040