• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஆயிரம் ஆண்டுகளின் கதைகள்]

சியூபூஃவின் ஜப்பானிய பயணம் பற்றி

சிங்ஸ்குவான் மன்னராக பதவி ஏற்ற பிறகு நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்று விரும்பினார். பொஹாய் கடலை ஒட்டியுள்ள தேவன் மலையில் ஆயுளை நீட்டிக்கும் சீன மூலிகை வளர்வதை கேள்விப்பட்டதும் இந்த மருந்தை பறிக்க யென் நாட்டைனச் சேர்ந்த லூ சன் என்பவரை அனுப்பினார். லூ சன் இந்த மருந்தை தேடிக் கண்டுபிடிக்க வில்லை. அவரை அடுத்து சியூ பூஃ என்பவரை சிங்ஸ்குவான் மன்னர் மீண்டும் அனுப்பினார். சியூ பூஃ கடலில் பயணம் செய்த பின் திரும்பினார். பொன்லாய் தேவன் மலையில் ஏறி மூலிகை மருந்தை கண்டறிந்ததாக அவர் சொன்னார். மலையில் வாழ்ந்த தேவன் தாம் வழங்கிய அன்பளிப்பு குறைவு என்று கூறி மூலிகையை கொண்டு செல்ல அனுமதி வழங்க வில்லை என்று அவர் தெரிவித்தார். மூலிகை பெற வேண்டுமாயின், சிறந்த ஆண்பெண்களையும் அவர்களையும் கைவினைத் தொழிலாளர்களைகளையும் அன்பளிப்பாக கொண்டு வர வேண்டும் என்று மலைத் தேவன் கூறினார். இதை கேட்டறிந்த சிங்ஸ்குவா மன்னர் மகிழ்ச்சியடைந்தார். உடனே 3000 சிறுமியர் சிறுவர்களையும் ஒரு கூட்டம் கைவினைத் தொழிலாளர்களையும் தேர்வு செய்து சியூ பூஃ இடம் ஒப்படைத்தார். தேவன் மூலிகையை எப்படியாவது கொண்டு வரும்படி அவர் கட்டளையிட்டார். சியூ பூஃ கடலில் பயணம் செய்த பின் வெறும்கையுடன் திரும்பி வந்தார். கப்பல் மலையை நெருங்க விடாமல் கடலில் வாழும் பெரிய மீன்கள் தடுத்தன என்று அறிவித்தார். சியூ பூஃ சொன்ன கதையை சிங்ஸ்குவான் மன்னர் கனவில் பார்த்தார். நம்பினார். அத்துடன் இந்த பெரிய மீனைக் கொல்வதைக கனவு கண்டார். தேவன் மலையில் தடை நீக்கப்பட்டது என்று சிங்ஸ்குவான் மன்னர் கருதினார். மீண்டும் 3000 சிறுவர் சிறுமிகளையும் கைவினை தொழிலாளர்களையும் தேர்வு செய்து அவர்களை சியூ பூஃயிடம் ஒப்படைத்தார். உண்மையில் தேவன் மலை, மூலிகை மருந்து இல்லை. ஆனால் உண்மையைச் சொல்ல சியூ பூவுக்கு துணிவு இல்லை. அவர் இந்த சிறுவன் சிறுமிகளையும் கைவினை தொழிலாளர்களையும் கூட்டிக் கொண்டு ஜப்பானுக்கு சென்றார். அங்கே அவர்கள் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்தனர். பிறகு சியூ பூஃ ஜப்பானின் பூஃஜி மலைத் தொடரில் மரணமடைந்தார்.

ஜப்பானில் சியூ பூஃ பற்றிய கதைகள் அதிகமாக பரவின. அவர் ஜப்பான் வரலாற்றில் ஜப்பானை நிறுவிய சன்வூ மன்னராக அழைக்கப்பட்டார். ஜப்பானிய மக்கள் சியூ பூஃவை தங்களின் முன்னோடியாக வழிபடுகின்றனர். அவரும் மூலிகைத் தேவன் என பாராட்டப்பட்டார். இதுவரை ஜப்பானிய மரபு சித்திலம்ன்னத்தில் சியூ பூஃவின் கல்லறை நிலைநாட்டப்பட்டது. 1991ம் ஆண்டில் ஜப்பானிய மக்கள் சியூ பூஃ எனப்படும் பூங்காவை உருவாக்கியுள்ளனர். இலையுதிர் காலத்தில் அங்குள்ள மக்கள் சியூ பூஃவை கும்பிடுகின்றனர். 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாபெரும் தொழுகை விழா நடைபெறுகின்றது.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040