• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஆயிரம் ஆண்டுகளின் கதைகள்]

பீகிங் மனிதர் புதைவடிவங்கள் காணாமல் போனது பற்றி

பீகிங் மனிதர் புதைவடிவங்கள் காணாமல் போனது பற்றி

உலகில் புகழ் பெற்ற பீகிங் மனிதர் புதைபடிவங்கள் காணாமல் போவதற்கு முன் பீகிங் சியெஹு மருத்துவ மனையின் பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.

பசிபிக் போர் மூண்ட பிறகு இந்த தொல் பொருள் ஆய்வில் ஈடுபட்ட புகழ் பெற்ற மானிடவியல் அறிஞர் வெய்ததன் ரெயி சியெஹு மருத்துவ மனையில் பீகிங் மனிதரின் புதைபடிவத்திற்கு பாதுகாப்பு கிடைக்காத நிலையில் இதை அமெரிக்காவில் கொண்டு போய் பாதுகாக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். முத்து துறைமுக குண்டு வீச்சு நிகழ்வதற்கு 2, 3 வாரங்களுக்கு முன் சியெஹு மருத்துவ மனையின் பொது துறை பணியகத்தின் தலைவர் போ வென் திடீரென பீகிங் மனிதரின் புதைபடிவங்களை பெட்டியில் வைக்க வேண்டும் என்று அறிவித்தார். அப்போது 5 மண்டையோடுகளின் படிவுகள் முகத்தின் 14 கீழ் தாடை எலும்புகள், தொடை எலும்புகள், கை, பல்கள் முதலிய 147 புதைபடிவங்கள் அனைத்தும் பத்திரமாக பஞ்சுப் பொதியில் வைத்து தாள், துணி, பஞ்சு ஆகியவற்றால் அடுக்கடுக்காக கட்டப்பட்டு இரண்டு மரப் பெட்டிகளில் வைத்து அமெரிக்க தூதரகத்திற்கு ஏற்றிச் செல்லப்படன. தரையில் போரிடும் அமெரிக்கக் கடல் படையுடன் அமெரிக்காவுக்கு ஏற்றிச் செல்லப்படுவதாக இருந்தன. ஆனால் அவை திடீரெந மாயமாக மறைந்தன. இதுவரை அவை கண்டுபிடிக்கப்பட வில்லை.

இது பற்றிய கதைகள் அதிகம். இவை சீங்குவான் தீவிலிருந்து ஹாலிசன் அரசு தலைவர் என்னும் அஞ்சல் கப்பலின் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் கடலில் மூழ்கின என்று சிலர் கூறினர். அஞ்சல் கப்பல் ஜப்பானிய படைகளால் பறிமுதல்செய்யப்பட்டு பீகிங் மனிதர் புதைபடிவுகள் ஜப்பானிய படைகளால் தடுக்கப்பட்டன என்று சிலர் கூறினர்.

2வது உலக போர் நிறைவடைந்த பின் அமெரிக்க படைகள் ஜப்பானில் இந்த புதைபடிவுகளைத் தேட மாபெரும் முயற்சி மேற்கொண்டன. ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. 1972ம் ஆண்டில் அமெரிக்காவின் பணக்காரர் ஜேம்ஸ் இந்த புதைபடிவுகளை கண்டுபிடித்தால் வெகுமதி வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். பலர் இவற்றைக் கண்டிபிட்டித்ததாக அறிவித்தனர். ஆனால் அவை பிகிங் மனிதர் புதைபடிவுகள் அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டன. 1991ம் ஆண்டில் அமெரிக்க கடல் படை தளபதியும் வரலாற்றுவியல் அறிஞருமான பூரான் அப்போது பீகிங் மனிதர் புதைபடிவகளை இழைந்ததால் இன்னலுக்குள்ளாக்கப்பட்ட டாகடர் பீஃலியின் கடிதத்தை பெற்றார். பீகிங் மனிதர் புதைபடிவகளை ரகசியமாக பதுக்கிவைத்த பெண்மனியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கடிதத்தில் அவர் தெரிவித்தார். ஆனால் 1992ம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் டாகடர் பூஃலீ காலமானார்.

பீகிங் மனிதர் புதைபடிவகள் காணாமற்போய் பல ஆண்டுகள் கழிந்த போதிலும் இவை இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. பீகிங் மனிதர் புதை படிவங்கள் சில சீனர்களின் மூலம் சில அமெரிக்கரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன. ஆனால் அமெரிக்கர்கள் பறிகொடுத்தனர். நாட்டுபற்றுடைய அறிவியலாளர்கள் அவற்றை தேடி பிடித்து நாட்டுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று காலமான சீன முன்னாள் தலைமை அமைச்சர் சோஅன்லாய் உயிருடன் இருந்த போது கூறினார்.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040