• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஆயிரம் ஆண்டுகளின் கதைகள்]

துங்குவாங் மொக்கௌ கற்கற்குகை

துங்குவாங் மொக்கௌ கற்குகை உலகிலேயே மிக பெரிய புத்த மத வரலாற்று பாரம்பரியச் சிங்னமாகும். உலகில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தக் கலை களஞ்சியம் சீனாவின் வட மேற்கு கோ பி பாலைவனத்தின் மலை பாறையில் கட்டப்பட்டது ஏன்?

துங்குவாங் மொக்கௌ கற்குகை அமைந்துள்ள இடம் லெச்சுயன் என்னும் முனிவரால் தெரிவு செய்யப்பட்டது. கி.பி.366ம் ஆண்டில் முனிவர் செச்சுயன் துங்குவாங் வட்டாரத்தின் சான்வியெ மலையின் அடிவாரத்துக்கு சென்றார். அப்போது மாலைப் பொழுதானதும் எங்கே தங்கலாம் என்று கவலைப்பட்டார். தலை தூக்கிப் பார்த்ததும் அவரின் கண்களின் முன்னால் எதிரேயுள்ள மிங்சா மலை தங்கமயமாகக் காட்சியளித்தது. ஆயிரக்கணக்கான புத்தர்கள் தங்க ஒளிவீச காட்சி தந்தனர். இதைக் கண்டு இந்த இடம் புனிதமானது என்று நினைத்து ஆட்களை வேலைக்கு அமர்த்தி கற்குகையை உருவாக்கினார். தாங் வம்சம் வரை அங்கே ஆயிரத்துக்கும் அதிகமான கற்குகைகள் உருவாக்கப்பட்டன.

தொல் பொருள் ஆய்வு நிபுணர்கள் நீண்டகாலமாக ஆராய்ந்த பின் பண்டைகாலத்தில் முன்னோடிகள் விவேகம் மிக்கவர்கள் என்று கருதின்ர். பாலை வனத்தில் மொக்கோ கற்குகை உருவாக்கப்பட்டதால் தட்டியெடுக்கப்பட்டது புத்த மதத்திற்கும் சாதாரண மக்களின் வாழ்க்கைக்குமிடையில் இயற்கையான தடுப்பு ஏற்பட்டது. புத்த மதம் சார்ந்த சிந்தனையுடன் அந்த இடம் தெரிவு செய்யப்பட்டது. துங்குவாங் மொக்கோ கற்குகை மலை சார்ந்து ஏரியை எதிர்நோக்குகின்றது. அதை சுற்றியுள்ள மரங்கள் தனிச்சிறப்பு மிக்க காட்சியை அளிக்கின்றன. குளிர் காலத்தில் மணல் காற்று குகையின் பின் பக்கத்தற்கு மேற்கிலிருந்து கற்குகையின் உச்சி வழியாக அதை பாதிக்காமல் வீசுகின்றது. கோடை காலத்தில் கிழக்கிலிருந்து காற்று வீசும் போது கற்குகைக்கு எதிரேயுள்ள சான்வெய் மலை இயற்கையான தடுப்பு சுவரை போல் அதை பாதுகாக்கின்றது. காற்று நேரடியாக கற்குகையை பாதிக்காது. ஆகவே மொகோ கற்குகை வறட்சியான மண்டலமாக மாறியுள்ளது.

இதன் காரணமாக மொகோ கற்குகை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் 11 வம்சங்களில் உருவாக்கப்பட்ட 492 கற்குகைகளும் பெருவாரியான சுவர் ஓவியங்களும் சிலைகளும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. மிகவும் மதிப்புக்குரிய பண்பாட்டு கலைச் சிங்னங்களை உலகத்திற்கு விட்டுசென்றுள்ளன.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040