• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஆயிரம் ஆண்டுகளின் கதைகள்]

யியூமிங்யியூன் தொல் பொருட்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளன?

1860ம் ஆண்டு பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு கூட்டுப் படைகள் பீகிங்கை ஆக்கிரமித்த போது யியூமிங்யியூனில் நுழைந்து அதை காலியாக கொள்ளையடித்தனர். எத்தனை மதிப்புக்குரிய பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர் என்பது இதுவரை கணக்கிட முடியவில்லை. பிரெஞ்சு ஆர்கிரமிப்பு படைகள் நாடு திரும்பிய பின் பேரரசருக்கு அன்பனிப்பாக சமர்பித்த பொருட்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரமாகும். இன்று யியூமிங்யியூனின் தொல் பொருட்களை கண்டு ரசிக்க வேண்டுமாயின் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

பல்லாயிரக் கணக்கான மதிப்புமிக்க நகைகளை, சிங் மற்றும் ஹான் வம்சங்களிலுள்ள தொல் பொருட்கள்,, ஸியூய் மற்றும் தாங் வம்ச காலங்களின் நூல்கள், ஓவியங்கள், மிங் மற்றும் சிங் வம்சகாலங்களின் தங்க மற்றும் ஜேடு நகைகள் லண்டன் ரோயா அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. யியூமிங்யியூனிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பல ஆயிரம் தொல் பொருட்களையும் வைக்கும் வகையில் பிரான்ஸின் நெப்போலியன் பஃன்தான்பை லூ கோட்டையகத்தில் சீன அரங்கத்தைச் சிறப்பாக கட்டினார். இந்தத் தொல் பொருட்களில் சான், சோ வம்சக்காலங்களில் தயாரிக்கப்பட்ட வெண்கலக் கருவிகள், மிங், சிங் வம்சா காலங்களில் தயாரிக்கப்பப்ட்ட பிங்கான் பொருட்கள், ஜேடு பொருட்கள் யானை தந்தச் சிற்பங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சியென்லுங் பேரரசரின் 66வது பிறந்த நாளின் நினைவாக தயாரிக்கப்பட்ட ஜேடு திரை, யியூமிங்யியூன் காட்சிகள் தீட்டப்பட்ட 80 மதிப்புக்குரிய தொல் பொட்கள் முதலியவை சீன அரங்கத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

                                

குரங்கின் தலை சிலை வெண்கல புலி சிலை

            

வெண்கல மாட்டு தலை சிலை சியென்லுன் விரும்பிய ஜாடி

2000ம் ஆண்டு மே திங்களுக்கு முன்பும் பின்பும் ஹாங்காங் தொல் பொருள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட சில யியூமிங்யியூன் தொல் பொட்களில் பிறந்த நாளை 12 மிருக சிங்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஒவ்வொரு சிங்னத்திற்கு நீர் ஊற்றெடுக்கும் திறமை உண்டு. ஆக்கிரமிப்பு படைகள் அவற்றைக் கொள்ளையடித்த போது மிக மதிப்புக்குரிய பொருட்களாக அவற்றை மதித்தனர். ஆகவே அவற்றை பெற்றவர்களை மிகவும் தனிச் சிறப்புமிக்கவர்களாக கருதலாம்.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040