சீனாவின் அழகான இயற்கை காட்சிகள்
சீனாவில், சுற்றுலா வளங்கள் அதிகமாக உள்ளன. கம்பீரமான மலை, அழகான ஆறு, நீரூற்றுக்கள் அருவி, கம்பீரமான பழங்கால கட்டிடங்கள் ஆகியவை காணப்படுகின்றன. விசித்திரமான விலங்குகள் மற்றும் தாவரங்கள், எண்ணற்ற வரலாற்று சிதிலங்கள் ஆகியவையும் உள்ளன. இயற்கை காட்சிகளும் பல்வேறு பண்பாட்டுக் காட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று ஒளி ஊட்டுகின்றன. யுனெஸ்கோ வெளியிட்ட "உலக மரபுச் செல்வங்கள் பட்டியலில்" சீனாவின் 29 சிதிலங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில், 3 இயற்கை சிதிலங்களும் 21 பண்பாட்டு சிதிலங்களும் 4 இயற்கை மற்றும் பண்பாடு எனும் இரட்டை சிதிலங்களும் உள்ளன. இவையனைத்தும் சீன மக்களின் விவேகத்தையும் அயாராத உழைப்பையும் வெளிப்படுத்துகின்றன.
இவை தவிர, சீனாவில் எண்ணற்ற எழில்மிக்க இயற்கை காட்சிகளும், ஆழந்த பண்பாடு கமழும் இடங்களும் காணப்படுகின்றன. பயணிகள் இவற்றிலிருந்து சீனாவின் அழகான இயற்கை காட்சிகளையும் பண்டைக்கால நாகரிகத்தையும் உணர்ந்துகொள்ளலாம்.
1 2 3 4