• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஈர்ப்பு தன்மை வாய்ந்த சீனா]

சீனாவின் புகழ்பெற்ற இயற்கை காட்சித் தலங்கள்

சீனாவில் இயற்கை வளம் செழுமையானது, உலக இயற்கை மரபு செல்வங்களில் சேர்க்கப்பட்ட JIU ZHAI GOU, ZHANG JIA JIE, ஹுவாங் லுங் இயற்கை காட்சித் தலங்கள் உள்ளிட்ட பெரிய மலைகள் மற்றும் ஆறுகள் தவிர, மேலும் பல அழகான இயற்கை காட்சி இடங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தென் மேற்கு சீனாவிலுள்ள குய்லின், வட கிழக்கு சீனாவிலுள்ள சாங்பாய் மலை, குய்சோ மாநிலத்திலுள்ள நான்கு நங்கையர் மலை, யுன்னான் மாநிலத்திலுள்ள சிசுவாங் பான்னா வெப்ப மண்டல சதுப்பு நில காடுகள், ஹைநான் தீவிலுள்ள தென்னை மரங்கள் நிறையக் காணப்படும் இடம் முதலியன கண்டுகளிக்கத் தக்கவை.

குய்லின் இயற்கை காட்சிகள்

குய்லின் நகரம் தென்மேற்கு சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. மிதமான, ஈரமான காலநிலை உண்டு. மிகவும் குளிரும் வெப்பமும் இல்லை. ஆண்டு சராசரி வெப்பம் 19 டிகிரி சென்டிகிரேட் ஆகும். ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கின்றது.

குய்லின், ஒப்பீட்டளவில் சிறந்த இயற்கை உயிரின வாழ்க்கை சூழலைக் கொண்டிருக்கின்றது. புவியியல் ஆய்வின் படி, சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன், இந்த இடம் ஒரு கடலாக இருந்தது. புவியியக்கம் மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக, இங்கு படிப்படியாக பல்வடிவத்தில் அமையும் மலையுச்சிகளும் மலை குகைகளும் நிலத்தடி ஆறுகளும் உருவெடுத்தன. இந்த விசித்திரமான நில அமைவுகளும் ஆயிரக்கணக்கான காட்சிகளும், இவற்றைச் சூழ்ந்து அமையும் வயல்களும் ஒன்றிணைந்து, உலகில் புகழ் பெற்ற, தனிச்சிறப்பு வாய்ந்த இயற்கை காட்சி தலமாக குய்லின் மாறியுள்ளது. இதில் பசுமையாக மலை, தெளிவான ஆற்று நீர், விசித்திரமான மலைக் குகை, அழகான பாறை ஆகியவற்றைக் கொண்ட குய்லின் இயற்கை காட்சி உலகில் முதன்மையானது என போற்றப்படுகின்றது.

குய்லின் நகரம் 2110 ஆண்டு வரலாறுடையது, நீண்டகால ஒளிமயமான வரலாற்று பண்பாடும் அதற்கு உண்டு. நகரப்புறத்தில் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்கப்படும், 109 தேசிய நிலை, தன்னாட்சிப் பிரதேச நிலை மற்றும் நகர நிலை தொல் பொருள் பாதுகாப்பு பிரிவுகள் உள்ளன. குய்லின் இயற்கை காட்சியை பெருமையுடன் போற்றி, படைக்கப்பட்ட கவிதைகளும் புத்த மதத்தவரின் உருவங்களும் மலைச் சுவரிலும் குகைகளிலும் பரவலாக காணப்படுகின்றன. அவற்றில், "குய்ஹை கற்சாசனங்கள்", "சிசான் மோயா கல் சிற்பம்" முதலியவை மிகவும் புகழ்பெற்றவை. குய்லின் நகரில் பிலியன் மலை, QIXING பூங்கா, LONGSHENG வென்னீர் ஊற்று, LUDI கற்பாறை, XIANGBI மலை ஆகியவை பிரபலமானவை.

தற்போது, இந்நகரில் வெளிநாட்டு பயணிகளை வரவேற்கக்கூடிய மொத்தம் 28 நட்சத்திர ஹோட்டல்களும், 18 சர்வதேச சுற்றுலா சேவை நிறுவனங்களும் அயல் மொழியில் சரளமாக பேசுக்கூடிய ஆயிரத்துக்கும் அதிகமான வழிகாட்டிகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், இந்நகரின் சுற்றுலாவுக்கான அடிப்படை வசதிகள் மேலும் மேம்பட்டுள்ளன. தற்போது உள்நாட்டு வெளிநாட்டு பெரிய நகரங்களுக்கு நேராக செல்லும் 40க்கும் அதிகமான விமானப் பறப்பு வழித்தடங்கள் உள்ளன.

சாங்பை மலை

சாங்பை மலை, வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாநிலத்தில் அமைந்துள்ளது. சீனாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான எல்லையாக விளங்குகின்றது. அத்துடன், துமென்சியாங், யாலுசியாங், சோங்ஹுவாசியாங் ஆகிய மூன்று ஆறுகளின் தோற்றுவாய் இடமுமாகும். எல்லையில்லா காடு, அதில் வாழும் பல்வகை அரிய விலங்குகள் ஆகியவற்றினால், இது 1980 ஆம் ஆண்டிலேயே ஐ. நாவின் சர்வதேச உயிரின பாதுகாப்பு பிரதேசங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது, இது, சீனாவின் தேசிய நிலை 4A இயற்கை காட்சி தலமாகும்.

சாங்பை மலை, வட கிழக்கு சீனாவிலான முதலாவது மலை என அழைக்கப்படுகின்றது. வரலாற்றில், வட கிழக்கு மக்கள் இங்கு தான் வாழ்ந்து உழைத்துவந்தனர். இது மன்சூ இனத்தின் பிறப்பிடமும் ஆகும். எனவே, இது சீனாவின் சிங் வமிச ஆட்சியின் புனித இடமுமாக போற்றப்பட்டது. இந்த மலை ஒரு சுற்றுலா தலமாகவும் கொரிய இன மக்களின் புனித மலை எனவும் பெயர் பெற்றுள்ளது.

வெள்ளை பாறை, உறை பனி ஆகியவற்றினால் இந்த மலைக்கு இந்தப் பெயர் இடப்பட்டது. இது ஒரு ஓய்ந்த எரிமலை. வரலாற்று பதிவின் படி, கி.பி 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்த மலை மூன்று முறை வெடித்தெழுந்தது. சாங்பை மலையின் சிறப்புமிக்க அமைவுகள் எழில்மிக்கவை. இந்த மலையில், வான் ஏரி, யே ஹுவா காடு, நிலத்தடி காடு, பெரிய பள்ளத்தாக்கு, மலை பூங்கா, முக்கிய மலையுச்சி, வென்னீர் ஊற்று, ஹேபெங் நுழைவாயில், கற்காடு உள்ளிட்ட பல புகழ்பெற்ற காட்சித் தலங்கள் உள்ளன.

வட கிழக்கிலான ஜின்சன், கீரி தோல், PILOSE ANTLER ஆகியவற்றின் முக்கிய உற்பத்தி இடமாகவும் இந்த மலை விளங்குகின்றது. மலையில் பல அரிய உயிரினங்கள் வாழ்கின்றன. அழகிய தேவதாரு மரம், மலை திராட்சை, காட்டு காளான், சின்தாலாய், ஆகிய தாவரங்களும், சைபீரிய புலி, செந்நிற கொண்டையுடைய நாரை முதலிய விலங்குகளும் உள்ளன.

சாங்பை மலையில் சுற்றுப் பயணம் செய்வதற்கு, போக்குவரத்து மிகவும் வசதியானது. விமானம் மூலம் பெய்சிங், ஷாங்கை, சென்யாங் போன்ற மாநகரங்களிலிருந்து புறப்பட்டு, யான்சி நகரை அடைந்த பின், பேரூந்து மூலம் வந்தடையலாம். மலையின் மேலும் அடிவாரத்திலும் பல்வேறு நிலை ஹோட்டல்கள் இருக்கின்றன. வசதிமிக்க ஹோட்டலில் ஒரு இரவு தங்கினால் 220 யுவான் செலவழித்தால் போதும். சாதாரண விருந்தகத்தில் தங்கினால் ஒரு படுக்கைக்கு 10 முதல் 40 யுவான் தேவைப்படும்.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040