• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஈர்ப்பு தன்மை வாய்ந்த சீனா]

ஈர்ப்பு ஆற்றல் மிக்க சிறிய நகரங்கள்

சீனாவின் நகரங்கள் நீண்ட வரலாறுடையவை. குறிப்பாக, நூறு ஆண்டுகால வரலாறுடைய, சிதையாமல் பாதுகாக்கப்பட்ட சிறிய நகரங்கள் ஈர்ப்பு ஆற்றல் மிக்கவை. எடுத்துக்காட்டாக, யுன்னான் மாநிலத்தின் லிசியாங் நகரம் உலக பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்படுள்ளன. சிறிய நகரின் வரலாறு, பண்பாடு, சிறிய நகரின் நேற்றைய நிலைமை, இன்றைய நிலைமை ஆகியவற்றால் மிகப் பல உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் வருகை தருவதற்கான முக்கிய காரணமாகியுள்ளன. இவ்வாறே, சோச்சுவாங், பெங்குவாங் குச்செங், யாங்சோ, ஊசென், நன்சுன், தாலி உள்ளிட்ட பல சிறிய நகரங்கள் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளின் கண்பார்வைக்கு வந்துள்ளன.

சோச்சுவாங்

சோச்சுவாங் எனும் சிறிய நகரம், கிழக்கு சீனாவின் கியாங்சு மாநிலத்தில் அமைந்துள்ளது. பழைய நகரம் சுச்சோவிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலே மட்டும் இருக்கின்றது. ஹுவாங் சான் மலையில், சீனாவின் மிக அழகான காட்சிகள் குவிந்திருக்கின்றன. ஆனால் சோச்சுவாங் எனும் இடம் சீனாவில் ஆற்றுநீர் சூழ்ந்திருக்கும் எழில்மிக்க ஊராக விளங்குகின்றது என்று சீனாவின் புகழ்பெற்ற ஓவியர் திரு வூ குவான்சுங் தமது கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.

இந்த சிறிய நகரைச் சூற்றி, தெங், பையன், தியன்சான், நான் ஆகிய நான்கு ஏரிகளும் 30க்கும் அதிகமான ஆறுகளும் காணப்படுகின்றன. நகரின் வீடுகள் அனைத்தும் ஆற்றங்கரையில் கட்டப்படுகின்றன. 60 விழுக்காட்டுக்கு அதிகமான குடி மக்கள் மிங் வமிச மற்றும் ஜிங் வமிச காலத்தில் பழைமை பாணியில் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். 0.4 கிலோமீட்ட பரப்பளவுடைய இந்நகரில் சுமார் 100 முற்றங்களுடன் கூடிய பழைய வீடுகளும் 60க்கும் அதிகமான சித்திர செங்கல் வாயிற்கோபுரங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் சுத்தமான அமைதியான இவ்விடத்தில் கல்வி கற்கும் நல்ல வழக்கம் உண்டு. வரலாற்றில் பல அறிவாளர்கள் கலை இலக்கிய வடிவங்களில் சோச்சுவாங்கிற்கு ஒளி யூட்டினர். மேற்கு சின் வமிச இலக்கியஞானி சாங் ஹன், தாங் வமிச கவிஞர் லியூ யு சி, லு குய்மொங் ஆகியோர் இங்கு வசித்தனர்.

சோச்சுவாங்கில், ச்சுவான்பூ கோயில், பூ ஆன் பாலம், மிலௌ கட்டடம் முதலிய செயற்கை காட்சி இடங்கள் உள்ளன.

சுச்சோவுக்கும் ஷாங்கைக்குமிடையில் சோச்சுவாங் அமைந்துள்ளதால், போக்குவரத்து மிகவும் வசதி. ஷாங்கை, சுச்சோ ஆகியவற்றிலிருந்தும் குறிப்பிட்ட நேர வண்டி நேரடியாக சோச்சுவாங்கிற்கு செல்கின்றது. அது ஷாங்கைக்கு பக்கத்தில் இருப்பதனால், பயணிகள் அன்றே ஷாங்கைக்குத் திரும்பலாம். எனவே சோச்சுவாங்கில் நட்சத்திர ஹோட்டல் அதிகமில்லை. சாதாரண விடுதிகள், அங்கு இருப்பவரால் நடத்தப்படுகின்றன. வசதிகள் முழுமையாக இல்லை. ஆனால் சுத்தமாக உள்ளன.

பழைய நகரம் பெங்குவாங்

பெங்குவாங் நகரம் மத்திய சீனாவின் ஹுனான் மாநிலத்தின் துஜியா மற்றும் மியாவ் இனத் தன்னாட்சி சோவில் அமைந்துள்ளது. சீனாவின் மிக அழகான சிறிய நகரங்களில் ஒன்று என நியூசிலாந்து எழுத்தாளர் லுயி. ஐலி போற்றினார். சிங் வமிச பேரரசர் காங்சியின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்நகரம் மேற்கு ஹுனான் மாநிலத்து முத்து என்று அழைக்கப்படுகின்றது. இது மிகவும் சிறியது. நகரில் கிழக்கிலிருந்து மேற்கு வரை செல்லும் ஒரே ஒரு வீதி இருக்கின்றது. ஆனால், அது ஒரு பசுமையான நடைபாதையாக விளங்குகின்றது.

இந்த நகரம், பழைய நகரப் பகுதி, புதிய நகரப்பகுதி என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. பழைய நகரப் பகுதி, மலை மற்றும் ஆற்றினால் சூழப்படுகின்றது. தொசியாங் எனும் ஆறு, நகரத்துக்கு ஊடாகச் செல்கின்றது. செந்நிற கற்களால் உருவான நகரச் சுவர் ஆற்றங்ககரையில் நிற்கின்றது. நன்ஹுவா மலையின் பக்கத்தில் நிற்கும் நகர வாயிற்கோபுரம் சிங் வமிச காலத்தில் கட்டப்பட்டது. வட நகர வாசலின் கீழ் அகலமான ஆற்றின் மேல் ஒரு சிறிய மரப் பாலம் காணப்படுகின்றது. இங்கு, இது முன்பு நகரத்திலிருந்து வெளியே செல்லும் ஒரே ஒரு ஊடுவழியாக இருந்தது.

பெங்குவாங் நகரம், நவ சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் சென் சொங் வென்னின் ஊராகும். அவருடைய பழைய இல்லம் ஒரு தெருவின் ஓரத்தில் அமைந்துள்ளது, பெசிங்கிலுள்ள நாலு பக்கமும் வீடு அமைந்த முற்றம் போல. இல்லம் முழுவதும் செங்கல் மற்றும் மரத்தால் ஆனது. கருப்பு ஓடு, வெள்ளை சுவர், சட்ட அமைப்பு ஜன்னல் ஆகியவை பண்பாட்டு மணமிக்கவை. துங்லிங்யிங்ஹுன், நன்குவாதியேசுய், ஷான்சுசென்சுங், லுங்தான்யுஹோ, சிபெங்திங்சியூ, லந்சிங்ஜியோகோ, பான்கோகுய்தௌ, சிஜியோயூயே ஆகியவை இந்நகரின் எட்டு முக்கிய காட்சி இடங்களாகும். விமானமுலம் ஹுனான் மாநிலத்தின் ஜிஷௌ நகரை அடைந்த பின், பேரூந்து மூலம் பெங்குவாங் நகர் சென்றடையலாம்.


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040