• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[போர் கதைகள்]
7 தேசங்களின் கலகத்தை ஜோவு யாபு அடக்கினார்

கி.மு.200இல் மேற்கு ஹன் வம்சத்தின் ஒரு புகழ்பெற்ற தளபதியாக ஜோவு யாபு இருந்தார். இவர் கண்டிப்பான இராணுவ நிர்வாகி ஆவார். மேற்கு ஹான் அரச வம்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஏழு தேசங்களின் கலகத்தை அடக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இவற்றால் அவர் நன்கு புகழ்பெற்றிருந்தார்.

ஒரு முறை பேரரசன் வென், எல்லைப் பிரதேசத்தில் அமைந்திருந்த மூன்று படைத்தளங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அவர் முதல் இரண்டு படைத்தளங்களிலும் தளபதிகளால் கோலாகலமாக வரவேற்கப்பட்டார். அரசனின் ஆய்வுக் குழுவினர் ஜோஉ யாபுவின் படைத்தளத்தை நெருங்கிய போது, படைவீரர்கள் அனைவரும் போர் உடை தரித்து கைகளில் ஆயுதங்களுடன் விழிப்பான நிலையில் காணப்பட்டனர். அரசரின் குழு நுழை வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டது. பேரரசனின் பரிவாரங்கள் அரசன் இங்கு வந்திருப்பதாக அறிவித்தனர். அரசன் உள்ளே நுழைவதற்கு வாயிலைத் திறக்கும் படி வாயிற்காவலர்களுக்கு கட்டளையிட்டனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. "நான் எனது ராணுவ தளபதியின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிவேன்" என வாயிற்காவலன் கூறினார். தன்னுடைய தளபதியிடம் இருந்து அனுமதியின்றி அவன் எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. பேரரசனின் ஆய்வுக்குழுவை உள்ளே விரும்படி எவ்வளவோ வற்புறுத்திய போதும், காவலர்கள் மறுத்துவிட்டனர். ஜோஉ யாபுக்கு தனது அடையாளச் சின்னத்தை அரசன் சமர்ப்பித்தான். அதன் பிறகே ஜோஉ யாபு அவர்களை உள்ளே விரவிடுமாறு கட்டளையிட்டான். படைத்தளத்தில் உள்ளே எவரும் விரைவாக குதிரையில் செல்ல அனுமதிக்காத காரணத்தினால் வாயிலுக்கு உள்ளே மெதுவாகப் போகும்பிட அரச அணிக்குக் கூறப்பட்டது. பேரரசனின் அணி அதற்குக் கீழ்ப்படிந்தது.

ஜோஉ யாபு பேரரசனைப் பார்த்த போது அவன் உடற்கவசமும் தலைக் கவசமும் அணிந்து காணப்பட்டான். அவன் முழங்காலிட்டு மண்டியிட்டு வணங்காது தலையை அசைத்தான். தான் இராணுவச் சீர் உடையில் இருப்பதால் இராணுவப் பாணியிலேயே பேரரசருக்கு வணக்கம் செலுத்த முடியுமென அவர் கூறினான். அவனின் நடவடிக்கையை ஏற்றுக்கொண்ட பேரரசர் ஜோஉ யாபு ஓர் உண்மையான தளபதி ஆவார். அவரைப் போன்ற இராணுவ வீரனால் மட்டுந்தான் காட்டு மிராட்டிகளின் தாக்குதல்களைத் தடுக்க முடியும். ஏனைய இரண்டு ராணுவங்களும் கட்டுக் கோம்மாக இல்லை என கூறினார். பேரரர் தனது இறப்பின் போது தனது மகனுக்கு கூறிய இறுதி வார்த்தைகள் என்னவென்றால் தனது இறப்பின் பின்னர் எதாவது நிகழ்ந்தாலும் அவன் ஜோஉ யாபுவை நம்ப முடியும் என்பதாகும்.

ஜிங் தி புதிய பேரரசர் ஆனார். அவருடைய ஆட்சிக் காலத்தில் தலைமையில் ஏழு தேசங்களின் கலகத்தை ஏழு சிற்றரசர்கள் ஆரம்பித்தார்கள். ஜோஉ யாபு இக்கலகத்தை அடக்குவதற்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கலகக்காரர்களுடன் சண்டை செய்ய மறுத்து முதலில் பாதுகாப்பை வலுப்படுத்தினார். அவர் கலகக்காரர்கள் பொறுமை இழப்பதற்காக காத்து இருந்தார். கலகக்காரர்கள் பின் வாங்கி ஓடும் படி தள்ளப்பட்ட போது அவர் பின்புறத்தில் இருந்து ஒரு தாக்குதலுக்கு கட்டளை இட்டார். இறுதியாக கலகம் அடக்கப்பட்டது. இதிலிருந்து சிற்றரசுகள் ஒரு இலாகாவுடன் அவர்களுடைய சொந்த நிர்வாகத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், பெரு நிலத் தோட்டங்கள் இளவரசர்களுக்கு சொந்தமாக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் இவ்வண்ணம் ஒன்று சேர்க்கப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040