• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[போர் கதைகள்]

ஜாஓவை மீட்பதற்கு வெய்யை முற்றுமையிடுதல்

ஜாஓவை மீட்பதற்கு வெய்யை முற்றுமையிடுதல் என்பது போரும் தேசங்கள் காலத்தில் ஓர் மிகப் புகழ்பெற்ற சண்டையில் இருந்து வருகின்றது. இந்தச் சண்டையானது சுன் பின் என்ற தந்திரசாலியின் ராணுவத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியது.

அந்தப் போர் உண்மையில் வெய் தேசத்தின் ஒரு தளபதியான பாஙஅ சுவானுக்கும் சுன் பின்னுக்கும் இடையில் நடந்தது. ஒரு காலத்தில் இருவரும் ஒரே குருவிடம் ராணுவத் தந்திரங்களைக் கற்று, வெய் தேசத்தில் பணியாற்றினார்கள். ஆனால், சுன் பின்னின் ராணுவத்திறமையினால் அதிக பொறாமை கொண்ட பாங் சுவான் அடிக்கடி தொந்தரவு கொடுத்தான். சுன் பின் வெய்யில் நீங்கி ச்சி தேசத்தின் அரசவையில் ராணுவ ஆலோசகராகச் சேர்ந்தார்.

பாங் சுவான் ஓர் சிறிய நாடான ஜாஒ மீது தன்னுடைய ராணுவத்துக்கு தலைமை தாங்கி படையெடுத்துச் சென்றார். தலைநகர் முற்றுமையிடப்பட்டது. ஜாஒவின் அரசன் இன்னொரு பலமான தேசமான ச்சியிடம் உதவி கேட்பதற்காக ஒருவரை அனுப்பினார். ஜாஒவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ச்சி அரசன், தளபதி தியன் ஜியையும் தந்திரசாலியான சுன் பின்னை ராணுவ ஆலோசகராகவும் ஜாஒவுக்கு உதவி புரிவதற்காக நியமித்தார்.

அவர்கள் தமது பணியைத் தொடங்குவதற்கு முன்னர் அங்குள்ள நிலைமையையும் அவர்களுடைய திட்டங்களையும் கலந்து ஆலோசித்தனர். தியன் ஜி, பான் சுவானுடன் நேருக்கு நேர் போரிட விரும்பினார். ஆனால், சுன் பின் உடன்படவில்லை. அது ச்சி ராணுவத்துக்குத் தேவையில்லாத இழப்புக்களை ஏற்படுத்தும் என கூறினார்.

"இப்போது வெய்யின் படைகள் ஜாஒவில் இருக்கின்றன. வெய்யின் தலைநகர் படைகள் இன்றி இருக்கும். இந்நிலைமை எமக்குச் சிறந்த சந்தர்ப்பம் ஆகும். நாம் வெய்யின் தலைநகர் சூழ்ந்து கொண்டால் பான் சுவான் ஜாஒவில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டியிருக்கும். மறுபுறத்தில் வெய்யின் படைகள் ஓர் நீண்ட சண்டையில் பின்னர் ஏற்கனவே களைப்படைந்து விட்டன. மேலும் தலைநகரை பாதுகாப்பதற்காக திருப்பி வருவதற்குள் களைப்படைந்துவிடும் நாங்கள் தலை நகரில் கவலையில் இருந்து நீங்கி சௌகரியமாகவும் சுதற்திரமாகவும் இருக்கலாம். சௌகரித்தில் ஓர் உன்னத நிலையில் ிருக்கின்ற நாம் நன்கு ஓய்வு எடுத்து ஓர் திடீர் தாக்குதலுக்கு தயாராக முடியும்." எனக் காரணம் கூறினார்.

தியன் ஜி இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு வெய்யின் தலைநகரை நோக்கி படைகளை அணிவகுத்தான். ஒவ்வொன்றும் எதிர்பார்த்தது போல் நிகழ்ந்தன. வெய்யின் படைகள் அவர்களுடைய தலைநகர் ஆபத்தில் இருப்பதைக் கேள்வியுற்று வின்வாங்க வேண்டி இருந்தது. வெய் படைகள் ஓர் பள்ளத்தாக்கை அடைந்த போது பதுங்கும் இடங்களில் மறைந்திருந்த ச்சியிந் ராணுவ வீரர்கள் திடீரென மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். வெய் ராணுவத்தை முழுமையாக தோற்கடித்தார்கள். பான் சுவான் கூட பின்னர் சுன்பின்னுடனான சண்டையில் கொல்லப்பட்டார்.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040