• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[போர் கதைகள்]

சிபி போர்
 
வரலாற்றில் சிபி போர் மிகவும் புகழ்பெற்றது. அந்தப் போரில் எண்ணிக்கை பலம் குறைந்த ஒரு இராணுவம், தனது பலம் வாய்ந்த எதிரியை தோற்கடித்தது.

இக்கதை இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் மூன்று தேசங்களின் காலப்பிரிவில் நிகழ்ந்தது.

வெய் தேசத்தின் உண்மைத் தலைவனான சௌ சௌ ஹன் வம்சத்தின் இறுதிக் கட்டத்தில், வட சீனாவில் தனது கட்டுப்பாட்டை வெற்றிகரமாக நிறுவிய பின்னர், தனது இராணுவத்துடன் தெற்கு நோக்கி முன்னேறி சூ தேசத்தைத் தோற்கடித்தார். அவருடைய இராணுவம் ஜிங்சோவ் நகரைக் கைப்பற்றி, சூ தேச இராணுவத்தை ஜியாங் சியாவுக்கு பின்வாங்கி ஓடச் செய்தது. சூ தேசத்தையும் ஊ தேசத்தையும் ஒன்றாகத் தோற்கடிக்கும் முயற்சியில், சௌ சௌ தனது 200,000 படைவீரர்களை அழைத்துக் கொண்டு ஊ தேசத்தின் எல்லைக்கு அருகில் உள்ள யாங்சி ஆற்றை அடைந்தான். சூவும் ஊவும் பின்னர் சௌ சௌவுக்கு எதிராக ஒரு கூட்டணியை ஏற்படுத்தின.

எண்ணிக்கையளவில் சௌ சௌவின் படை கூட்டுப்படையின் பலத்தின் நான்கு மடங்கு பெரியதாக இருந்து போதும் இது ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்தது. ஏனென்றால், சௌவுடைய வீரர்களுக்கு ஒரு ஆற்றுப் போரில் அணுபவம் இல்லை. அவர் பின்வாங்கி யாங்ச்சி ஆற்றின் வடக்குக் கரையில் முகாமிட்டு, ஆற்றுக்கு அக்கரையில் உள்ள கூட்டுப்படைகளை எதிர்நோக்கினான்.

ஊ பக்கத்தின் தலைமைத் தளபதி ஜோ யு மற்று சூ தேசத்தின் தலைமை அமைச்சர் சூ கர் லியாங் ஆகிய இருவரும் எதிரிகளின் படகுகளை தீ வைத்துக் கொழுத்த ஒரு வழி கண்டனர். இது ரகசியமான தந்திரமாக இருந்தது. முதலில் அவர்கள் வெய்யின் நீண்ட அனுபவமுள்ள குவாங் கை என்பவரைப் பயன்படுத்தி, அவரை சரணடைவது போல நாடகமாடச் செய்தனர். இந்நோக்கத்திற்காக குவாங் கை தளபதியான ஜோ யுயுடன் வேண்டுமென்றே சண்டையிட்டார். இதனால், ஜோ யு அதிக கோபமடைந்து குவாங் கைக்கும் சவுக்கடி கொடுத்தார். இதற்கு பின்னர் குவாங் கை சௌ சௌவிடம் சென்று, தனது மனம் மாறிவிட்டதாகவும், தனது போர்க் கப்பல்கள் அணி வந்திவிட்டதாகவும் கூறினான். இந்த தந்திரமான பேச்சை சௌ சௌ நம்பிவிட்டான்.

சௌ சௌ பொறியில் தானாக சிக்கிக் கொண்டான். பின்பு, அக்காலத்தின் அபூர்வமான மற்றொரு ராணுவத் தந்திரமாக பாங் தௌங் என்பவர் சௌ சௌவிடம் சென்றார். அவர் சௌ சௌவிடம் உன்னுடைய எல்லாப் படகுகளையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கட்டிவிட்டால், போரில் வீரர்கள் ஆடாம்ல அசையாமல் நின்று போரிடலாம் என்றார். இது இணைப்பு தந்திரமாக இருந்தது. ஏனென்றால் சூ கே லியாங்கின் நல்ல நண்பராக பாங் தொங் இருந்தார். அவர் கூட்டணிப்படைகளுக்கு உதவினார்.

சௌ சௌ தனது ராணுவம் வட கையில் இருப்பதாலும் குளிர்காலத்தில் வடமேற்குத் திசையில் தான் காற்றுவீசும் என்று நம்பியதாலும் தீ தாக்குதல் இருக்கும் என்பதை புத்திகெட்ட தனமாக நிராகரித்தான்.

அவர் குவாங் கை தன்னுடைய கப்பல்களுடன் வருவதற்காக காத்துக் கொண்டிருந்த போது, ஊவின் போர்க் கப்பல்கள் அங்கே வந்தன. அவைகள் எரியும் நெருப்புடனும், மீன் எண்ணெயை மட்டும் ஏற்றி வந்தன.

அவைகள் சௌ சௌவின் கப்பற்படைக்கு அண்மையில் வந்தபோது திடீரென கொளுந்துவிட்டு எரியத் தொடங்கின. தென்கிழக்காக வீசிய பலமான காற்று உதவியாக இருந்தது. முற்றிலும் ஏமாற்றப்பட்ட சௌ சௌவின் கப்பல்கள் அனைத்தும் எரிந்தன. அந்த தீச்சுவாலை வடகரையிலும் பரவி, சௌ சௌவின் ராணுவ பிரதேசத்தில் பற்றி எரிந்து, அவருடைய படைகளையும் அழித்தது.

இந்த இறுதி போருக்குப் பின்னர் சௌ சௌ இன்றைய ஹெர் நான் மாநிலத்தில் உள்ள லூயாங்கிற்கு பின்வாங்கிச் சென்றான். அதேநேரத்தில் ஊ தேசம் தனது ஆட்சியை வடகிழக்குச் சீனாவில் உறுதிப்படுத்தியது. சூ தேசம் ஜிங்சோவை மீண்டும் கைப்பற்றி, அங்கிருந்து மேற்காக தற்போதைய சிச்சுவான் மாநிலத்திற்குள் நுழைந்தது. இவ்வாறு சீனா மூன்று சுதந்திர தேசங்களாக பிரிக்கப்பட்டது. இது சீன வரலாற்றில் மூன்று தேசங்களின் காலப் பகுதியாக அறியப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040