• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[போர் கதைகள்]

அயராமல் இறுதிவரை தாக்குதல்

வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலப் பகுதியில் (கி.மு. 770-476) ச்சி தேசம் தனது மேலாதிக்கத்துக்காக லு தேசத்தின் மீது ஒரு தாக்குதலை ஆரம்பித்தது. லுவை விட வலுவாக ச்சி இருந்தது. லு அரசன் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சண்டையிடுவதற்கு தானே படைகளுக்கு தலைமை ஏற்றான்.

இந்தப் போர் பற்றிய வதந்தி பரவியது. இதை கேள்விப்பட்ட சௌ குய் என்ற ஓர் கீழ் மட்ட நபர் அரசனிடம் சென்று, இப்போர் பற்றி அரசனுடன் கலந்துரையாடத் தீர்மானித்தார்.

சிலர் அவரை தடுத்து நிறுத்துவதற்கு முயற்ச்சித்தார்கள். போர் அல்லது சமாதானம் என்பது உயர் மட்ட அலுவலர்களுக்கு உரியது. நீங்கள் ஏன் அதைப்பற்றி போசிக்கிறீர்கள் என்றனர். சௌ குய் "அதிகமான இந்த உயர் மட்ட அலுவர்கள் அடிக்கடி குறுகிய நோக்கத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் போருக்கான போதுமான திறமையுடன் இருப்பதில்லை என்பதில் நான் பயமடைகின்றேன். நமது தேசம் ஆபத்தில் இருக்கின்றது எப்படி நான் பார்த்துக் கொண்டிருப்பது" என விடையளித்தான்.

எனவே சௌ குய் அந்த அரசனிடம் சென்று நாம் ச்சியை விட அதிகம் பலவீனமானவர்களாக இருக்கின்றோம். பலமான எதிரியுடன் சண்டையிடுவதற்கு உங்களுடைய ஆட்சியின் உத்தரவாதம் என்ன?எனக் கேட்டான். அரசன் தான் தனது சிறன்த உணவுகளையும் ஆடம்பரமான துணிமணிகளையும் தனது ஆலுவலர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும், அவன் இறைவனுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் பதிலளித்தான். இது ஓர் வெற்றிக்கு உத்தரவாதமாக இருக்காது என சௌ குய் கூறினார். ஓர் தீர்பளிக்கின்ற வேளைகளில் தான் எப்போதும் நீதியாகவும் நடு நிலையாகவும் இருப்பதற்கு முயற்ச்சித்தேன் என் அரசன் கூறினான். போர்களின் போது எதிரிகளை விட ஓங்கிய நிலையில் இருக்க மக்களின் அதரவை இது பெற்றுக் கொடுக்கும் என சௌ குய் கூறினார்.

சௌ குய் அந்த அரசனுடன் போருக்காக இணைந்தான். இரு பகுதியினரும் சாங் ஷாஓ என்று அழைக்கப்பட்ட இடத்தில் சந்தித்தனர்.

சீனாவில் பண்டைய போர்களின் போது படை முரசடித்து எதிரிப்படைக்கு சவால்விட்டு போருக்கு அழைப்பது வழக்கம். எதிரிப்படை அதற்கு பதிலாக முரசறைய வேண்டும். இல்லாவிட்டால் முதல் படை மீண்டும் முரசை அடிப்பார்கள். வடிமையாக மூன்று தரம் முரசு ஒலித்ததன் பின்னர் தாக்குதல் ஆரம்பமாகும்.

ச்சி ராணுவம் முதல் தடவை முரசு ஒலித்தது. லு அரசன் எதிர்ப் பறையை அடிக்க தொடங்குவதற்குத் தயாரானான். ஆனால் இது சௌ குய்யினால் நிறுத்தப்பட்டது. கொஞ்சம் பொறுத்து இருங்கள். அந்த நேரம் இன்னும் வரவில்லை என கூறினார்.

அவர்கள் மூன்றாம் முறை பறை வருவதற்காக காத்திருந்தனர். மூன்றாம் முறை முரசு ஒலித்தது. பின்னர், அவர்கள் ராணுவ வீரர்களை தாக்குதலுக்கு அழைக்கின்ற முரசொலியை எழுப்பினார்கள். லு ராணுவ வீரர்கள் ஆவேசமான உறுதியுடன் எதிரிடைத் தாக்கினார்கள். ச்சி ராணுவம் புறமுதுகிட்டு தாறுமாறாக தப்பி ஓடியது. சௌ குய் மட்டும் எதிரியுடைய படை வியூகத்தை நன்கு கவனத்த பின்னரே ஓர் முன்னெடுப்புடன் வெற்றியைத் தொடர உடன்பட்டார். இறுதியில் லு போரில் வென்றது.

பின்னர், சௌ குய் ஏன் அவர் முதல் பறையில் ராணுவம் வீரர்களை தாத்துதலுக்கு அனுமதிக்கவில்லை என்பதை அரசனுக்கு விவரித்தார். சண்டையிடுதல் வெற்றி பெறுவதற்கு ஆன்மாலுக்கு அழத்தத்தை கொடுப்பதற்கு ஆரவாரமின்மையை வேண்டி நிற்கின்றது. அந்த எதிர் இராணுவ வீரர்களின் மனோதிடம் அவர்களுடைய முதலாவது பறையில் தூண்டப்பட்டு மிக உயர்வாக இருந்தது. சண்டையிடுவதற்கு பிரயோசனமற்ற இரண்டு முயற்சிகளுக்கு பின்னர் இரண்டாவது பறையில் இந்த மனோதிடம் குறைக்கப்பட்டது. மூன்றாவது பறைக்குப் பின்னர் அவர்களுடைய மனோதிடம் உயர்வாக வீழ்ச்சியடைந்தது. ஆனால், நமது ராணுவ வீரர்கள் கட்டுகோப்பு கலையாமல் உறுதியுடன் இருந்தனர். எனவே நாம் வெற்றி பெற்றோம் என அவர் கூறினார். நாம் ஏன் உடனே எதிரிக்குப் பின்னால் தொடரவில்லை என அரசன் மீண்டும் கேட்டான். ச்சி ஓர் பலமான தேசம் ஆகும். இது நம்மை ஒரு பொறிக்குள் ஏமாற்றுவதற்கு செய்யப்பட்ட ஒரு பாசாங்கு அல்ல என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எனக்கு இருந்தது. அவர்களுடைய தேர் வண்டிகளின் அடிச்சுவடுகளும் கொடுகளும் ஒழுங்கற்று இருந்ததை நான் பார்த்த போது, இது ஒரு ஒழங்கு செயய்ப்பட்ட பின்வாங்கலாக இருக்கவில்லை என்பதை நான் நிச்சயப்படுத்தினேன். என சௌ குய் விடயளித்தான். அரசன் சரி என்று தலையசைத்தான்.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040