அவுரி நீலக் கலிக்கோ
யாஞ்சி ஆற்றின் தெற்கு கீழ் பிரதேசங்களில் அவுரி நீிலக் கலிக்கோ பருத்தி ஆடைத் துணிகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. உள்ளூர் கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கு தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கு அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர். அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. சித்திரத்தில் உள்ள துணிகள் ஷாங்காய் அச்சு கலிக்கோ அருங்காட்சியகத்தில் அரும்பொருளாக இருக்கிறது. இது peony, பாசே போன்ற பல வடிவமைப்புக்களைக் கொண்டிருக்கிறது. இது உள்ளூர் கிராமப் பெண்களுக்கு ஓர் அடையாள உடையாக இருக்கிறது. காலப் போக்கில் சில இளம் பெண்களும் வெளிநாட்டவர்களும் இதைத் தங்களுடைய வீடுகளில் ஒரு அலங்கரிப்பாக பயன்படுத்தும் போக்கு ஏற்படுகின்றது.

1 2 3 4 5 6 7 8 9 10