• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஆடை அணிகள்]

நூறு குடும்ப சட்டை

சீனாவின் சில பகுதிகளில் இப்போதும் ஒரு பழைய கலாச்சாரம் தொடர்ந்து வருகின்றது. சீனப் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு பலருடைய ஆசிரிவாதம் கிடைக்குமானால் அவர்கள் ஆரோக்கியத்தையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டிருக்க முடியும் என நம்பினார்கள். எனவே நூறு குடும்பங்களின் உணவைச் சாப்பிட்டு நூறு குடும்ப குழந்தைகளின் சாட்டைகளை அணியும் ஒரு கலாச்சாரம் உள்ளது.

ஒரு பெண், குழந்தை பெறுகின்ற போது அவளும் அவளுடைய சொந்தத் தாயும் 100 துணித்துண்டுகளை பியாஓ ஜியாஓ யீ என அழைக்கப்படும் ஒரு குழந்தைச் சட்டையை உருவாக்குவதற்கு சேர்க்கத் தொடங்குவார்கள். ஒரு நூறு குடும்ப சட்டை புதிதாகப் பறிந்த குழந்தைக்கு ஆசிர்வாத்த்தையும் அன்பையும் கொடுக்கிறது.

இங்கு உள்ள படங்கள் நாட்டுப்புற எளிமையான பாணியில் உள்ள ஒரு இடுப்பு வரையான சட்டையானது வேறுபட்ட நிற துணியிலும் மற்றும் வேறுபட்ட துணி வகைகளுடனும் இருப்பதைக் காட்டுகின்றது.

இந்த நூறு குடும்ப சட்டை கலாச்சாரமானது வட சீனாவில் ஷான்சி, ஷன்சி, கான்சு ஹெர் பை ஹெர் னான் மற்றும் சான்துங் போன்ற மாநிலங்களில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இது சில தெற்குப் பிராந்தியங்களிலும் தொடர்ந்து இருக்கிறது.


1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040