ஸ்பெயின் அரங்கு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் C பகுதியில், அமைந்துள்ளது. நடப்பு உலகப் பொருட்காட்சியில் மிகப் பெரிய அரங்குகளில், இதுவும் ஒன்றாகும். பிரம்புப் பின்னலின் கலை வடிவமைப்புடன், ஸ்பெயின் அரங்கு பண்டைய மற்றும் புத்தாக்கப் பாணிகளை இணைக்கிறது. இவ்வரங்கின் வெளிச்சுவர், 8500க்கு கூடுதலான வண்ணமான பிரம்புகளால் மூடப்பட்டது. தொலைவிலிருந்து பார்த்தால், இது, பிஃளெமெங்கோ எனும் ஸ்பெயின் நாட்டு நடன ஆடையைப் போல் காட்சியளிக்கும். வடிவமைப்பாளர் Benedetta Tagliabue அம்மையார் பேசுகையில், பேரூக்கமான ஸ்பானிய பாணியிலிருந்து, இவ்வடிவமைப்புக்கான தூண்டல் எழுந்தது என்று, தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஸ்பெயின், உயிராற்றல் மற்றும் பேரூக்கம் நிறைந்த நாடாகும். இக்கட்டிடத்தை வடிவமைத்த போது, இந்த உணர்வுகளை சேர்க்க யோசித்தோம். இவ்வரங்கில் நுழைந்த பிறகு, எங்கெங்கும் பயணிகளின் கவனம் எல்லா இடத்திலும் ஈர்க்கப்படுவது உறுதி என்று அவர் குறிப்பிட்டார்.