• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியின் ஸ்பெய்ன் அரங்கு
  2010-03-24 09:58:37  cri எழுத்தின் அளவு:  A A A   

தவிர, அதிகமான பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகள், ஸ்பெயின் அரங்கில் நடைபெறவுள்ளன. சீன ரசிகர்கள், ஸ்பெயினை மேலும் அறிந்துகொள்ளும் வகையில், திங்கள்தோறும், உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் அல்லது ஷாங்காயின் முக்கிய நாடக அரங்கத்தில் குறைந்தது, ஒரு முறை பெரியளவு ஸ்பெயின் நாட்டுக் கலை நிகழ்ச்சியை நடத்த, ஸ்பெயின் அரங்கு திட்டமிட்டுள்ளது. அப்போது, ஸ்பெயினின் மிகப் புகழ்பெற்ற கலைஞர்கள், ஷாங்காயில் இசை நாடகம், பிஃளெமெங்கோ நடனம், லத்தீன இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி, ஸ்பெயினின் ஈர்ப்பாற்றலை வெளிப்படுத்துவர்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஸ்பெயின் அரசின் முதன்மைப் பிரதிநிதி தைனே அம்மையார் பேசுகையில், ஸ்பெயின் அரங்கின் கட்டுமானம் விரைவில் முடிவடையும். எதிர்வரும் சில நாட்களில், பல்வேறு ஏற்பாட்டுப் பணிகளை காலதாமதமின்றி நிறைவேற்றி, ரசிகர்களுக்கு தலைசிறந்த ஸ்பெயின் அரங்கை காட்சிக்கு வைப்போம் என்று குறிப்பிட்டார்.

உலகப் பொருட்காட்சி, ஸ்பெயினின் சொந்தப் பண்பாட்டை எடுத்துக்காட்டுவதற்கு நல்லதொரு அரங்கை வழங்கியது என்று ஸ்பெயினுக்கான சீனத் தூதர் சூபாங்சாவ் கருத்து தெரிவித்தார்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மூலம், ஸ்பெயின் மீதான சீன மக்களின் புரிந்துணர்வு மேலும் வலுப்பட்டு, இரு நாட்டு மக்களிடை இடைவெளி குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040