• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியின் ஸ்பெய்ன் அரங்கு
  2010-03-24 09:58:37  cri எழுத்தின் அளவு:  A A A   

ஸ்பெயினின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பிகாஸ் லுனா, ஸ்பெயின் அரங்கின் துவக்கப் பயணம் என்ற நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றார். இயற்கையிலிருந்து நகரத்துக்கு என்ற தலைப்பிலான இப்பகுதியின் மைய உள்ளடக்கம், பண்டைய காலத்திலிருந்து நகரம் உருவாக்கப்பட்டது வரையான அம்சங்களாகும். சாரம்ச மற்றும் அடிப்படையான புவியை அவர் விளக்கிக்கூறி, கண்காட்சியில் எடுத்துக்காட்டுவார். அவர் கூறியதாவது:

ரசிகர்கள் இவ்வரங்கில் நுழைந்தவுடன், தலைசிறந்த ஒளி மற்றும் ஒலி பயன்களையும் உணர்ந்துகொள்ளலாம். இங்குள்ள ஒலிச் சாதனங்களின் தரம், உலகில் முன்னணியில் உள்ளது. இந்த நிகழ்ச்சியை முழுமையாக பார்த்து ரசிப்பதற்கு சுமார் ஏழு நிமிடம் தேவை என்று அவர் அறிமுகப்படுத்தினார்.

ஸ்பெயின் அரங்கின் இரண்டாவது கண்காட்சி அறையின் தலைப்பு, பெற்றோர் காலத்தின் நகரத்திலிருந்து தற்போதைய நகரத்துக்கு என்பதாகும். சில காலத்துக்கு முன்பிலிருந்து இப்போது வரையான மீளாய்வு இங்கு எடுத்துக்காட்டப்படும். இயக்குநர், கவிதைகளின் மூலம், பிரதிநிதித்துவ கலைகளை விளக்கிக்கூறினார். மூன்றாவது காட்சிப்பகுதியில், தற்போதைய நகரத்திலிருந்து எதிர்கால தலைமுறைகளின் நகரத்துக்கு என்பது பற்றி குறிப்பிடுகையில், எதிர்கால நகர வளர்ச்சி மீதான எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் காணலாம்.

உலகப் பொருட்காட்சிக் காலத்தில், சுவையான ஸ்பெனிய உணவு வகைகளை, பயணிகள் உண்டு ரசிக்கலாம். ஸ்பெயினின் தலைசிறந்த சமையல் கலைஞரான Pedro Larumbe ஷாங்காய்க்கு வந்து, பார்வையாளர்களுக்கு சுவையான ஸ்பானிய உணவு வகைகளைச் சமைத்து வழங்குவார். அவர் கூறியதாவது:

உலகப் பொருட்காட்சியில், ஸ்பெயினின் புகழ்பெற்ற கடல் உணவுவகை, உருளைக்கிழங்கு ரொட்டி, சிற்றுண்டிகள் முதலியவற்றை, அனைத்து பார்வையாளர்களும் சுவைக்க வரவேற்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040