|
|
ஜுலைத் திங்கள் 8 ஆம் நாள் ஜுலைத் திங்கள் ஆம் நாள், எங்களுடைய தற்போதைய சீனப் பயணத்தின் 19வது மற்றும் இறுதி நாளாகும். இன்று காலையில் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு, கிளிட்டஸ் வீட்டிலிருந்து புறப்பட்டு, பெய்ஜிங் விமான நிலையத்தை காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தோம்.
| ஜுலைத் திங்கள் 7 ஆம் நாள் ஜுலைத் திங்கள் 7 ஆம் நாள், எங்களுடைய சீனப் பயணத்தின் 18வது நாளாகும். இன்று காலையில் தமிழ்ப்பிரிவின் முன்னாள் தலைவர் சுந்தரன், கலைமணி தமிழ்ப்பிரிவில் விரைவில் பணியாற்ற இருக்கும் நிலாநி, இலக்கியா, ஓவியா மற்றும் முகிலன் ஆகியோருடன் இணைந்து, கோடைக்கால மாளிகைக்கு சென்றோம். கோடைக்காலத்தின்போது, பேரரசிகள் வந்து ஓய்வெடுக்கும் இடமாக அக்காலத்தில் கோடைக்கால மாளிகை திகழ்ந்திருக்கிறது.
| ஜுலைத் திங்கள் 6 ஆம் நாள் ஜுலைத் திங்கள் 6 ஆம் நாள், எங்களுடைய சீனப் பயணத்தின் 17வது நாளாகும். நாள்தோறும் தொடர்ந்து மேற்கொண்ட பயணத்தினால், இன்று சற்றே ஓய்வெடுக்க விரும்பினோம். எனவே, காட்சியிடங்களுக்கு இன்று செல்லவில்லை. காலையில், கிளிட்டஸ் வீட்டிற்கு வந்த சுந்தரன், எங்களுடன் கொஞ்ச நேரம் உரையாடிவிட்டுச் சென்றார். சற்று நேரம் கழித்து, மூத்த பணியாளர் மலர்விழி அம்மையார் நாங்கள் தங்கியிருந்த இடம் வந்து எங்களை அன்புடன் நலம் விசாரித்தார்.
| |
|