இந்த இசையை நன்றாக தெரிந்து வைத்திருப்பர். இந்த இசை ஒலிக்கும் நேரம், நட்புக்கரம் நீட்டி செவிகளுக்கு அதிக செய்திகளோடு சீன வானொலி உங்களை நாடி வரும். இந்த இசைத்துளி, சீன வானொலி நிலையத்தின் சின்னமாக மாறியுள்ளது. கடந்த நூற்றாண்டின் 40ம் ஆண்டுகளின் துவக்கக் காலத்தில் பாசிஸ எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட சீன மக்கள், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்களை உறுதியாக எதிர்த்தனர். ஜப்பான் ஆக்கிரமிப்பு எதிர்ப்பை பரப்புரை செய்யும் வகையில், சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள யான் ஆனில் யான் ஆன் சிங்குவா வானொலி நிலையத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவியது.
1941ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள், இந்த வானொலி நிலையம் ஜப்பான் மொழியில் அதன் முதல் ஒலிபரப்பை தொடங்கியது. அதன் முதல் அறிவிப்பாளர், அப்போது சீனாவில் வாழ்ந்திருந்த ஜப்பானின் போர் எதிர்ப்பாளர், யுவான்ச்சிங்ச்செய் என்பவராவார். அந்த நாளே, சீன வானொலி நிறுவப்பட்ட நாளாகவும் அதன் பிறந்த நாளாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.
அப்போது ஒலிபரப்பு அறையாக இருந்தது ஒரு மலைக்குகை தான், 300வாட் ஆற்றல் மட்டுமே கொண்ட ஒலிபரப்பாக இருந்த போதும், அன்று முதல், வான் அலைகள் வழியே வெளிநாட்டினருக்கான சீனாவின் அன்னிய மொழி ஒலிபரப்புச் சேவை தொடங்கியது. இந்த வரலாற்றுக் காலத்தை பற்றி யுவானஅச்சிங்ச்சிய் நினைவு கூருந்தார்.
யான் ஆனில் ஒலிபரப்புப் பணிபுரிந்தபோது தொடர்புடைய வசதிகள் மிகவும் கடினமானவை. சகபணியாளர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர் என்று அவர் தெரிவித்தார். யான் ஆன் மலைக் குகையிலிருந்து பரவிய ஒலிபரப்பை கேட்ட பின், ஜப்பான் படையின் பல தளபதிகள் மற்றும் படையினர்கள், போர் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டனர். போர் எதிர்ப்பு இலட்சியத்தில் அவர்களும் ஈடுபடத் துவங்கினர்.
ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் வெற்றிபெற்ற பின், யான் ஆன் சிங்குவா வானொலி நிலையம் 1947ம் ஆண்டு ஆங்கில மொழி ஒலிபரப்பை தொடங்கியது. தற்போது, உலகின் பல்வேறு இடங்களில் சீன வானொலியின் ஆங்கில மொழி ஒலிபரப்பு கேட்கப்படலாம்.