1949ம் ஆண்டு நவ சீனா நிறுவப்பட்ட மாபெரும் துவக்க விழாவில், பெண் அறிவிப்பாளரான திங் யீ லான் தியென் ஆன்மன் சதுக்கத்தில் நேரடி ஒலிபரப்புக்கு பொறுப்பு ஏற்றார். பின்னர், சீன வானொலி நிலையத்தின் தலைமை இயக்குநராக அவர் பதவியேற்றார்.
யான் ஆன் சிங்குவா வானொலி நிலையம், தலைநகரான பெய்ஜிங்கிற்கு இடம்பெயர்ந்தது. அதன் பெயர் பலமுறை மாறிய பின், தற்போதைய சீன வானொலி நிலையமாக உறுதிபடுத்தப்பட்டது. இப்போது, சீன வானொலி 61 அன்னிய மொழிகளில் சர்வதேச ஒலிபரப்பை செய்து வருகிறது. உலகளவில் மிக அதிக மொழிகளைக் கொண்ட சர்வதேச செய்தி ஊடக நிறுவனமாக இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளின்போது சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப்பணி நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், சீன வானொலி நிலையம் பெரும் வளர்ச்சி கண்டது. பரப்புரைக் கண்ணோட்டம், நிகழ்ச்சிகளின் அம்சங்கள், அறிவிப்பு வழிமுறை உள்ளிட்டவற்றில் ஆழமான சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை, உலகளவில் 32 செய்தியாளர் அலுவலங்களை சீன வானொலி நிறுவியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியற்றில் 8 பிரதேசத் தலைமைச் செய்தியாளர் அலுவலங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. வளரும் நாடுகளின் ஒரு செய்தி ஊடகமான சீன வானொலி, உலகின் பல்வேறு இடங்களில் காணப்பட்ட புதிய மாற்றங்களையும் புதிய நிலைமையையும் பன்முக மற்றும் ஆழமான முறையில் அறிவிக்க பாடுபடும்.