தொலைத்தொடர்புத் தொழில் நுட்பம் தொடர்ந்து மேம்படுவதற்கு ஏற்ப, சீன வானொலி தன்னையே மாற்றி வருகிறது. சீன வானொலி-கென்யாவின் நைரோபி பண்பலை ஒலிபரப்பு 2006ம் ஆண்டு பிப்ரவரி திங்களில் தொடங்கியது. வெளிநாடுகளில் நிறுவப்பட்ட சீன வானொலியின் முதல் பண்பலை ஒலிபரப்பு இதுவாகும். ஒரு திங்களுக்கு பின் அப்போதைய சீன வெளியுறவு அமைச்சர் லி சாவ்சிங் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார்.
முன்பு பல ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது, அவற்றுடனான உறவு மென்மேலும் வலுப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படை மேலும் நிதானமாக மாறியது. அதேவேளை, சீன வானொலியின் ஒலிபரப்பு இந்நாடுகளில் மிகவும் வரவேற்கப்பட்டதை நான் அறிந்து கொண்டேன் என்று லி சாவ்சிங் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜுன் முதல் நாள் வரை, சீன வானொலி நிலையம் உலகளவில் 60 பண்பலை ஒலிபரப்புகளை நிறுவியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய 1,200மணி நேர நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன. சீனா பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் வெளிநாட்டு நேயர்களின் தேவை இவற்றால் நிறைவு செய்யப்படுகின்றது.
சர்வதேச அரங்கில் சீன வானொலியின் செல்வாக்கு தொடர்ந்து உயர்வதுடன், வெளிநாட்டு சர்வதேச செய்தி ஊடகங்களைச் சேர்ந்த திறமைசாலிகள் சீன வானொலிக்கு வருகை தந்து, பணிபுரிகின்றனர். இதன் மூலம், சீன வானொலியின் நிகழ்ச்சி வகைகள் செழுமையடைந்துள்ளன. பெரிய சர்வதேச நிகழ்ச்சிகள் நிகழும்போது, சீன வானொலி உடனடியாக ஆங்கில மொழியில் உலகளவில் அறிவிப்பை வழங்குவதாக, ஆங்கில மொழிப் பிரிவின் துணைத் தலைவர் லி பெய் சுவான் கூறினார்.
மேலும் பயனுள்ள சர்வதேச பரப்புரையை செய்யும் வகையில், சீன வானொலி இடைவிடாமல் புதிய ரக ஊடகங்களை வளர்த்து வருகிறது. தற்போது, CRI Online என்ற இணையதளம் மூலம், சீன வானொலியின் மிகப் புதிய நிகழ்ச்சிகள் மற்றும் இதர தகவல்கள் அனைத்தும் கிடைக்கலாம்.
2011ம் ஆண்டின் துவக்கத்தில் பல்வகை ஊடக வளங்களை ஒன்றிணைப்பதன் மூலம் CIBN எனும் வானொலி மற்றும் தொலைக்காட்சி வலையமைப்பு நிறுவப்பட்டது. இணைய ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி, செல்லிடப்பேசி மூல வானொலி மற்றும் தொலைக்காட்சி, இணையத் தொலைக்காட்சி, உள்ளிட்ட பல்வகை புதிய ஊடக அலுவல்களை கொண்ட பெரிய ஊடக தொகுதி, இதுவாகும். அதேவேளையில், 70ஆண்டுகால வரலாறுடைய சீன வானொலி நிலையம், புதிய ஊடகக் காலத்தில் முழுமையாக நுழைந்துள்ளது என்று தலைமை இயக்குநர் வாங் கங்நியன் தெரிவித்தார். எதிர்வரும் 5 ஆண்டுகால வளர்ச்சி பற்றி பேசுகையில், அவர் இவ்வாறு கூறினார்.