உலகளவில் மிக அதிகமான மொழிகள் கொண்ட சர்வதேச வானொலி நிறுவனமாக, சீன வானொலி நிலையம், உலகிற்கு சீனாவை அறிமுகப்படுத்துவது, உலகிற்கு உலகை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றை தமது கடமையாகக் கொண்டுள்ளது. ஐ.நா தலைமையகத்தில் உள்ள பேரவை மண்டபம், கொசோவோ போரில் குண்டு தாக்குதல், அமெரிக்க வெள்ளை மாளிகையில் அரசு அலுவலர்களின் சந்திப்பு, ஆப்பிரிக்க அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழா உள்ளிட்ட பல இடங்கள் மற்றும் நிகழ்வுகளில், சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்கள் காணப்பட்டனர். அவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள். வளரும் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில், சீன வானொலி நிலையத்தின் முதல் தொகுதி செய்தியாளர் அலுவலகங்கள் வெளிநாடுகளில் நிறுவப்பட்டது முதல், இது வரை, வெளிநாடுகள், ஹாங்காங், மக்கெள ஆகியவற்றில் 32 செய்தியாளர் அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. எதிர்வரும் பத்து ஆண்டுகளில், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பிரதேங்களில் சீன வானொலி நிலையத்தின் 8 பிரதேசத் தலைமைச் செய்தியாளர் அலுவலகங்கள் நிறுவப்படும். இச்செய்தியாளர் அலுவலகங்கள், சீன வானொலி நிலையத்தின் உணர்வறிப்பொறி போல், உலகின் மூலைமுடுக்கெல்லாம் கவனம் செலுத்துகின்றன. நிதானமற்ற பிரதேசங்களில், சீன வானொலி நிலையத்தின் சுறுசுறுப்பான செய்தியாளர்கள் அதிகமாக காணப்படலாம்.
பாகிஸ்தானில் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர் அலுவலகத்தின் முதன்மைச் செய்தியாளர் ஹூங் லின்னைப் பொறுத்த வரை, 21ஆம் நூற்றாண்டின் முதல் ஐந்தாண்டுகள், மிகவும் மறக்கப்பட முடியாத காலமாகும். ஆப்கானிஸ்தான் போர், ஈராக் போர், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை, இந்து மாக்கடல் கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளின் செய்தி அறிவிப்பில் அவர் ஈடுபட்டார்.




அனுப்புதல்













